நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஐ.எஸ் தீவிரவாதிகளின் பலம்!
ஐ.எஸ் தீவிரவாதிகளின் பலம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதற்கு உதாரணமாக சிரியாவில் உள்ள பழமை வாய்ந்த கல்லறைகளை அழித்துள்ளனர். கடந்த...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_176.html

ஐ.எஸ் தீவிரவாதிகளின் பலம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதற்கு உதாரணமாக சிரியாவில் உள்ள பழமை வாய்ந்த கல்லறைகளை அழித்துள்ளனர்.
கடந்த மாதம் சிரியாவின் பால்மைரா(Palmyra) நகரை ஐ.எஸ் தீவிரவாதிகள் கைப்பற்றினர்.
பால்மைராவில் உலகப்புகழ்பெற்ற வரலாற்று சின்னங்கள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நகரை கைப்பற்றிய நாள்முதல் அங்குள்ள மக்களை துன்புறுத்தி வரும் ஐ.எஸ் அமைப்பு, தற்போது இரண்டு பழமை வாய்ந்த கல்லறைகளை அழித்துள்ளது.
அதில் ஒன்று முகமது நபியின் மைத்துனரான இமாம் அலியுடையது, மற்றொரு கல்லறை 500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து வந்த நிஸார் அபு பாஹா என்ற துறவியுடையது என்று சிரியாவின் அரும்பொருட்கள் துறைத்தலைவர் மாமூன் அப்துல்கரீம் கூறியுள்ளார்.
ஏற்கெனவே ஐ.எஸ். பயங்கரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள நிம்ருத், ஹத்ரா ஆகிய புராதன நினைவுச் சின்னங்களை அழித்து, அதன் விடியோ காட்சியை இணையதளங்களில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.


Sri Lanka Rupee Exchange Rate