இறந்த தலைவரை மேயராக தெரிவு செய்த மெக்சிகோ மக்கள்
மெக்சிகோவில் இறந்த தலைவர் மேயராக தெரிவு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோ நாட்டில் சமீபத்தில் நடந்த யுரெகுவாரோ நகர...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_273.html
மெக்சிகோவில் இறந்த தலைவர் மேயராக தெரிவு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெக்சிகோ நாட்டில் சமீபத்தில் நடந்த யுரெகுவாரோ நகர மேயர் தேர்தலில், இடதுசாரி அமைப்பான மொரெனா சார்பில் என்ரிக் ஹெர்னான்டஸ் என்பவர் போட்டியிட்டார்.
தனது தேர்தல் பிரசாரத்தில், அந்நகரில் செயல்படும் நைட்ஸ் டெம்பிளர் போதை மருந்து கடத்தும் கும்பலிடம் அரசு மண்டியிட்டு கிடப்பதாக குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் கடந்த மாதம் யுரெகுவாரோவில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்ட என்ரிக் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
எனினும் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குச்சீட்டில் என்ரிக்கின் பெயர் இடம்பெற்றிருந்தது.
திட்டமிட்டபடி வாக்குப்பதிவும் முடிந்து கடந்த 7 ஆம் திகதி வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் 39 சதவீத வாக்குகள் பெற்று மேயர் தேர்தலில் என்ரிக் வெற்றிபெற்றார்.
இதையடுத்து இறந்த என்ரிக்கிற்கு பதிலாக அவரது தேர்தல் பிரசார துணை தலைவர் மார்கோ அன்டோனியோ கோன்சாலெஸ் புதிய மேயராக பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.