ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிக்க ஒரு நாளைக்கு 58 கோடி செலவு செய்யும் அமெரிக்கா
சிரியாவிலும், ஈராக்கிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ் தீவிரவாதிகள் ஒட்டுமொத்த உலகுக்கே அச்சுறுத்தலாக விளங்குகிறார்கள். அவர்களுக்கு எதி...
http://kandyskynews.blogspot.com/2015/06/58.html
அவர்களுக்கு எதிராக அமெரிக்க கூட்டுப்படைகள் வான்தாக்குதல்கள் நடத்தி வந்தாலும், அவர்களை முழுமையாக ஒடுக்க முடியவில்லை.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து, சிரியா, ஈராக்கில் அமெரிக்கா தலைமையிலான உலகநாடுகள்படை நடத்திய வான்வெளி தாக்குதலில் 10 ஆயிரம் ஐ.எஸ். தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இரு நாடுகளிலும் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக வான்வழி தாக்குதலில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா இதற்காக ஒருநாளைக்கு ரூ. 58 கோடிக்கு மேல் செலவுசெய்கிறது என்று தெரியவந்துள்ளது.
இதுவரையில் சுமார் 17 ஆயிரம் கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்டுள்ளது என்று அமெரிக்கா தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.