சஜின் வாஸ் பிணை கோரி மனுத் தாக்கல்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, கொழும்பு உயர் நீதிமன்றில் பிணை கோரி மனுத் தாக்கல் செய்துள்...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_163.html
ஏற்கனவே சஜின் வாஸ் குணவர்தன தாக்கல் செய்திருந்த பிணை மனுவை கொழும்பு கோட்டே நீதவான் பிரியந்த லியனகே நிராகரித்து எதிர்வரும் 15ம் திகதி வரையில் விளக்க மறியலை நீடித்திருந்தார்.
உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு எதிர்வரும் 11ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பிலேயே இவர் கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.