யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் நேரில் கண்ட சாட்சிகளை சமர்ப்பிக்க புதிய அப்ளிகேசன்
இலங்கை உட்பட உலக முழுவதும் இடம்பெறுகின்ற யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் கண்ணால் கண்ட சாட்சிகளை சமர்ப்பிக்க புதிய கையடக்கத் தொலைபேசி அப...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_391.html
மனித உரிமை ஆர்வலர்களின் ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களை நீதிமன்றில் சமர்ப்பிப்பதற்கு உதவும் என்ற ரீதியில் லண்டனைத் தளமாகக் கொண்ட International Bar Association என்ற சங்கத்தினர், டிஜிட்டல் தொழில்நுட்பத்தை கொண்டு இதனை உருவாக்கியிக்கியுள்ளனர்.
சிரியா, உக்ரேன் அல்லது கொங்கோ ஜனநாயக குடியரசு போன்ற நாடுகளில் பொங்கி எழும் யுத்தக் குற்றங்கள், சித்திரவதைகள், இனப்படுகொலை தொடர்பில் நீதி வழங்குவதே இதன் நோக்கமாகும்.
ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும்போது, அதனை கலைக்க துணை இராணுவ குழுக்கள் அல்லது பாதுகாப்பு படைகளினால் மேற்கொள்ளப்படுகின்ற அத்துமீறல்கள் இறுதியில் இதன் ஊடாக பதிவு செய்யப்படும்.
யுத்தம் இடம்பெற்று வரும் நாடுகளைச் சேர்ந்த பொதுமக்கள் யுத்தக் குற்றச் செயல்கள் குறித்து நம்பகமான சாட்சிகளை சேகரித்து பகிரக் கூடிய வகையில் இந்த மொபைல் அப்ளிகேசன் உருவாக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது கையடக்கத் தொலைபேசி மூலம் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான சாட்சிகள் திரட்டப்பட்டிருந்தன.
இதனை அடிப்படையாகக் கொண்டே புதிய கையடக்க தொலைப்பேசி அப்ளிகேசன் உருவாக்கப்பட்டுள்ளது.
மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான கையடக்கத் தொலைபேசி வீடியோ ஆதாரங்கள் அண்மைக் காலகமாக சமூக ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டு வருகின்றது.
எனினும், இந்த வீடியோ ஆதாரங்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்ய முடியாத நிலைமை நீடிப்பதுடன் இதனை நீதிமன்றில் ஓர் சாட்சியாக சமர்ப்பிக்க முடியாத நிலைமை காணப்படுகின்றது.
குறித்த சாட்சிகள் போலியானவையா? உண்மையானவையா என்பதனை உறுதி செய்ய முடியாத நிலைமை காணப்படுகின்றது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் சர்வதேச சட்டத்தரணிகள் ஒன்றியம் இந்த கையடக்க அப்ளிகேசனை உருவாக்கியுள்ளது.
குற்றச் செயல்கள் தொடர்பிலான நேரில் கண்ட சாட்சியங்கள் என்ற அப்ளிகேசன் உருவாக்கப்பட்டுள்ளது.
குறித்த புதிய அப்ளிகேசன் பயனரின் இடம், பதிவு செய்யப்பட்ட காலம், நேரம், அருகிலுள்ள வைபை வலையமைப்பு உள்ளிட்ட விடயங்கள் திரட்டப்பட்டு அனுப்பக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
வீடியோ ஆதாரங்கள் திரிபுபடுத்தப்படாதவை என்பதனை உறுதி செய்யும் வகையில் இந்த அப்ளிகேசன் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே அருகிலுள்ள வைபை வலையமைப்புடன் தொடர்புகள் ஏற்படுத்திக்கொள்ளப்படுகின்றன. அத்துடன் இவ்வாறு திரட்டப்படும் வீடியோ ஆதாரங்களை சர்வதேச சட்டத்தரணிகள் பேரவையின் தரவுத்தளத்திற்கும் அனுப்ப முடியும்.
இந்த புதிய தொலைபேசி அப்ளிகேசன் யுத்தக் குற்றச் செயல்களை தடுப்பதற்கு மிக முக்கிய காரணியாக அமையும் என இந்நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் மார்க் எலிஸ் தெரிவித்துள்ளார்.
கையடக்கத் தொலைபேசி வீடியோ காட்சிகளின் உண்மைத் தன்மை குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதலளிப்பதற்கும் இந்த புதிய அப்ளிகேசன் உதவும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொலைபேசி அப்ளிகேசன் மூலம் திரட்டப்படும் வீடியோ ஆதாரங்களை ஊடகங்கள் சந்தேகமின்றி பயன்படுத்திக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2011ம் ஆண்டில் சனல் 4 ஊடகம் இலங்கை இராணுவத்தினர் தமிழ் கைதிகளை துன்புறுத்தும் காட்சிகளை உள்ளடக்கி ஆவணப்படம் தயாரித்திருந்தது.
இந்த ஆவணப்படம் போலியானது என அப்போது ஆட்சியிலிருந்த இலங்கை அரசாங்கம் நிராகரித்தது.
கடந்த நவம்பர் மாதம் சிரியன் ஹிரோ போய் என்ற ஆவணப்படத்தை மில்லியன் கணக்கான யூடியூப் பயனர்கள் பார்வையிட்ட போதிலும் அது உண்மைக்கு புறம்பானது என பின்னர் கண்டறியப்பட்டது.
துப்பாக்கிச் சூட்டிலிருந்து சிறுமி ஒருவரை காப்பாற்றுவது போன்று குறித்த வீடியோ காட்சி வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நோர்வே திரைப்பட இயக்குனர் ஒருவரினால் மோல்டாவில் வைத்து இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டிருந்தமை தீவிர விசாரணைகளின் பின்னர் கண்டறியப்பட்டது.
ஆவணப்படங்களின் உண்மைத்தன்மை தொடர்பில் நுணுக்கமாக மதிப்பீடு செய்வதில் சர்ச்சை நிலைமை தொடர்ந்தும் நீடித்து வருகின்றது.
எனினும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அப்ளிகேசன் இந்த பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சர்வதேச, பிராந்திய, உள்நாட்டு ரீதியிலான நீதிமன்றங்களில் சாட்சியமளிக்கும் வகையில் இந்த அப்ளிகேசன் உருவாக்கப்பட்டுள்ளது.
கண்ணால் கண்ட சாட்சிகளை சமர்ப்பிக்க புதிய கையடக்கத் தொலைபேசி அப்ளிகேசன் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு மாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனினும் மற்றைய சாதானங்களுக்கும் தழுவி கொள்ளும்.
இத்திட்டம், லண்டன் சட்ட தரவு நிறுவனம் லெக்ஸிஸ் Nexis கொண்டு உருவாக்கப்பட்டது, அதன் தகவல்களை சேமிக்கும் சேவையகங்கள் அமெரிக்காவிலே காணப்படுகின்றது.
மேலும் இதனை அங்கீகரிக்க முடியும் என்றால் இதனூடாக சாட்சிகளை எடுக்க முடியும் என, கண்ணால் கண்ட சாட்சிகளை சமர்ப்பிக்க புதிய கையட்ட தொலைபேசி அப்ளிகேசனின் இயக்குனர் வெண்டி பெட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.