கட்சித்தாவுமாறு தொந்தரவு கொடுக்கும் மனைவி – ஹோட்டலில் தங்கும் கெஹெலிய
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச என்ன கோஷம் போட்டாலும் அவரால் மீண்டும் அதிகாரத்திற்கு வர முடியாது என முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_120.html
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசும் போதே ரம்புக்வெல்ல இதனை கூறியுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெகவல் வெளியிட்டுள்ளது.
அந்த தொலைபேசி உரையாடலை குறித்த இணையத்தளம் இவ்வாறு வெளியிட்டுள்ளது.
சேர் மனைவியின் தொல்லை காரணமாக என்னால், வீட்டிற்கு செல்ல முடியவில்லை. நான் தற்போது கண்டி சுவிஸ் ஹோட்டலில் தங்கியிருக்கின்றேன்.
வீட்டுக்கு சென்றால், எப்போது கட்சி தாவ போறீர்கள் என்று மனைவி கேட்கிறாள். சேர் ..எனக்கு அமைச்சர் பதவி தேவையில்லை. மனைவிக்கு அமைச்சர் பதவி இல்லாமல் இருக்க முடியவில்லை.
மகிந்த எமது பெண்களுக்கு பழக்கிய பழக்கம் அது. மனைவிகளை பயன்படுத்தியே மகிந்த எங்களை கட்டுப்படுத்தினார். சேர் நீங்கள் பயப்பட வேண்டாம் மகிந்த என்ன கோஷம் போட்டாலும் அவருக்கு மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என கெஹெலிய ரம்புக்வெல்ல, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கூறியுள்ளார்.
ரம்புக்வெல்லவின் தொலைபேசி அழைப்பை செவிமடுத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கெஹெலியவை மீண்டும் கட்சியில் இணைக்க தான் விரும்புவதாகவும் எனினும் லக்ஷ்மன் கிரியெல்ல அதனை விரும்பவில்லை எனவும் கூறியுள்ளார்.
அத்துடன் கெஹெலியவை விட தனக்கு லக்ஷ்மன் கிரியெல்ல முக்கியமானவர் எனவும் அவர் எப்போதும் தன்னை கைவிட்டதில்லை எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
லக்ஷ்மன் கிரியெல்லவை இழுக்க மகிந்த எவ்வளவோ முயற்சித்தார். அவரது மனைவி மூலம் முயற்சித்து பார்த்தார். எனினும் அவர் தன்னையும் ஐக்கிய தேசியக் கட்சியையும் கைவிட்டுச் செல்லவில்லை எனவும் அவரை மீறி தன்னால் எதனையும் செய்ய முடியாது எனவும் பிரதமர், கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் கூறியுள்ளதாக அந்த சிங்கள இணையத்தளம் தெரிவித்துள்ளது.