20வது திருத்தம் தொடர்பில் இணக்கமில்லை என்றால் பொதுத் தேர்தலுக்கு செல்வது பொருத்தமானது!– சோபித தேரர்
அனைவரும் இணங்காவிட்டால், அரசியலமைப்புச் சட்டத்தின் 20வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பதிலாக அரசாங்கத்தை கலைத்து விட்டு பொதுத் தேர்...

http://kandyskynews.blogspot.com/2015/06/20_21.html

தேர்தல் முறையில் திருத்தங்களை மேற்கொள்ளும் 20வது திருத்தச் சட்டம் அனைத்து கட்சிகள், மதங்கள், இனங்கள் என அனைவருக்கும் நியாயத்தை நிலைநாட்டும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தேரர் தெரிவித்துள்ளார்.
கோட்டே ஸ்ரீ நாகவிகாரையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நியாயமான சமூகத்திற்கான மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான மாதுளுவாவே சோபித தேரரை சிறுபான்மை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் நேற்று சந்தித்து பேசினர்.
இதனையடுத்தே இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தப்பட்டது.