ஓகஸ்ட் 17ஆம் திகதிக்கு பின்னர் மீண்டும் பாதை அமைப்பேன்: மஹிந்த
நாட்டின் அபிவிருத்தி எதிர்வரும் 17ஆம் திகதிக்கு மீண்டும் மேம்படுத்தப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பஸ்கம ...


பஸ்கம விகாரையில் இடம்பெற்ற மதவழிபாடுகளில் கலந்துகொண்டதன் பின்னர் மக்கள் சந்தித்து அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அன்று புலிகளை நிறைவு கூறுவதற்கு விளக்கேற்றிய பிரதான அமைச்சர் உட்பட குழுவினருக்கு எதிராக வழக்கு தொடுக்கவில்லை. கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவாக மத வழிபாடுகளில் ஈடுபட்ட தேரர்கள் இன்று விளக்கமறியல்.
இதுவே மாற்றம் 100 நாட்கள் என்றார்கள் ஆனால் இன்று 200 நாட்கள் கடந்து விட்டது.
எங்கள் அமைச்சர்களை பழிவாங்கிவிட்டார்கள், உறுப்பினர்களை பழிவாங்கிவிட்டார்கள், எங்கள் முழு குடும்பத்தையும் பழிவாங்கிவிட்டார்கள்.
நான் நேற்றுமுன் தினம் தான் கண்டி பிரதேசத்திற்கு வருகை தந்தேன், கண்டி வருவதற்கு 03 அல்லது மூன்றரை மணித்தியாலங்களாகிவிட்டன.
எனினும் நான் அமைத்த பாதைகளை அமைத்திருந்தார்கள் என்றால் 55 நிமிடங்களில் என்னால் வர முடிந்திருக்கும்.
அதனையும் இடைநிறுத்தி விட்டார்கள், எனவே எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதிக்கு பின்னர் மீண்டும் அனைத்து பாதைகளையும் அமைக்க முடியும் என்று நான் நம்புகின்றேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.