100 நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை கொண்டு வந்தாலும் அரசு அஞ்சாது: நீதியமைச்சர்
அரசாங்கத்தை விரைவில் கலைத்து தமக்கு விருப்பமான நாடாளுமன்றத்தை தெரிவு செய்ய மக்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என நீதியமைச்சர் விஜேதாச...


பிரதமர் உட்பட முழு நாடும் தற்போதைய அரசாங்கம் தேவையில்லை எனக் கூறுகின்றனர். பிரதமர் அரசாங்கம் தனக்கு வேண்டாம் எனக் கூறும் சந்தர்ப்பத்தில் அவரை வீட்டுக்கு அனுப்ப நம்பிக்கையில்லாப் பிரேரணை தேவையில்லை.
அரசாங்கம் சிறுபான்மை பலம் கொண்ட அரசாங்கம் என்ற போதிலும் நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்னெடுப்பது குறித்து அரசாங்கம் தீர்மானிக்கும்.
ஒரு நம்பிக்கையில்லாப் பிரேரணை அல்ல, 100 நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை கொண்டு வந்தாலும் அரசாங்கம் அவற்றுக்கு அஞ்சப் போவதில்லை.
எதிர்வரும் தேர்தலில் போட்டியிட கட்சிகள் இல்லாத, வேட்புமனு கிடைக்குமா, இல்லையா என்ற நம்பிக்கையில்லாத அரசியல் அகதிகள் இந்த யோசனையை கொண்டு வந்துள்ளனர்.
தற்போது தேசப்பற்று பற்றி பேசும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோர் தருஷ்மன் அறிக்கையை தயாரித்து தொடர்பில் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான்-கீ-மூனுக்கு நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியிருந்தனர் எனவும் விஜேதாச ராஜபக்ச கூறியுள்ளார்.