கோத்தா மிகவும் பலவீனமான நிலையில் ஓருவித பதட்டத்துடன் காணப்பட்டார்,

நிதிமோசடி குறித்த விசேட பொலிஸ் பிரிவின் முன்னிலையில் புதன்கிழமை ஆஜரான வேளை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மிகவும் பதட்டத்த...

நிதிமோசடி குறித்த விசேட பொலிஸ் பிரிவின் முன்னிலையில் புதன்கிழமை ஆஜரான வேளை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மிகவும் பதட்டத்துடன் காணப்பட்டதாகவும், மிக் விமான கொள்வனவில் முறை கேடுகள் ஏதாவது இடம்பெற்றிருந்தால் அதற்கு முன்னாள் விமானப்படை தளபதியே காரணம் என தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆறு மணி நேரம் இடம்பெற்ற இந்த விசாரணைகளின் போது கோத்தபாயவிடம் முதலில் மிக் விமான கொள்வனவு குறித்த கேள்விகளே எழுப்பப்பட்டன.
மிகவும் பதட்டத்துடன், கைநடுக்கத்துடன் காணப்பட்ட கோத்தா உரிய முறையிலேயே விமான கொள்வனவு இடம்பெற்றதாக குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இது குறித்து நிதிமோசடி தொடர்பான பொலிஸார் துருவிதுருவி விசாரிக்கத் தொடங்கியதும் கோத்தபாய முன்னாள் விமானப்படை தளபதி எயர் மார்சல் ரொசான் குணதிலக மீது பழியை போட்டுள்ளார்.
நிதிமோசடிகள் ஏதாவது இடம்பெற்றிருந்தால் முன்னாள் விமானப்படை தளபதியே காரணம் என தெரிவித்த கோத்தபாயராஜபக்ச, தன்னை அதற்காக குற்றம்சாட்ட முடியாது என குறிப்பிட்டார்.
குறிப்பிட்ட மிக் விமானங்களை பயன்படுத்தியதாலேயே விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தை வென்றோம் என்பதை மக்கள் உணரவேண்டும், இது குறித்து எவ்வித விசாரணைகளும் இடம்பெறக்கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.
லங்கா மருத்துவமனையில் ( இலங்கை அப்பலோ) அவரிற்குள்ள பங்குகள்குறித்தும் அவரிடம் விசாரணை இடம்பெற்றது. குறிப்பிட்ட மருத்துவமனையின் பங்குகளை கோத்தாவின் நெருங்கிய நண்பரான டிலித் ஜெயவீர தனக்குசாதகமான விதத்தில் அதிகரித்து காட்டினார் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் அதன் பங்குகளை அவர்கள் இந்திய நிறுவனமொன்றிற்கு விற்பனை செய்துள்ளனர்.
விசாரணைகள் முடிவடைந்ததும் கோத்தா மிகவும் பலவீனமான நிலையில் ஓருவித பதட்டத்துடன் காணப்பட்டார், தன்னுடைய மெய்ப்பாதுகாவலர்களை அழைத்த அவர் தன்னுடைய வாகனத்தை உள்ளே கொண்டுவருமாறு தெரிவித்தார், காத்திருந்த ஊடகவியலாளர்களிடமிருந்து தப்புவதே இதன் நோக்கம். என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related

தலைப்பு செய்தி 7035585138736085935

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item