மைத்திரிக்கு பைத்தியம் பிடிக்க வைத்த ரணில்!
சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரக்தியடைந்த நிலையில் இருப்பதாக சிறிலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் குற்றம் சாட்டியு...
http://kandyskynews.blogspot.com/2015/05/blog-post_684.html
சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரக்தியடைந்த நிலையில் இருப்பதாக சிறிலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் நடவடிக்கைகள் காரணமாக மைத்திரிபால சிறிசேன விரக்தியடைந்துள்ளார்.
கொடுத்த வாக்குறுதிகளைச் செய்யாத இந்த அரசாங்கத்தில் இருந்து பயனில்லை என்பதால் தாங்கள் தங்களது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்ததாக அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்த சுதந்திர கட்சியின் நான்கு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா, சீ.பி.ரத்நாயக்க, மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பவித்ரா வன்னியாரச்சி ஆகியோர் அவர்களது அமைச்சு பதவிகளை இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் இராஜினாமா செய்தனர்.
இதன் பின்னர், அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர் மாநாடொன்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
'இன்று இந்த அரசாங்கத்தை ரணில் விக்கிரமசிங்கவே கொண்டு நடத்துகின்றார். அவர், பழிவாங்கலைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை. பொலிஸ்மா அதிபருக்கு ஆணையிடுவதும் ரணிலாகவே உள்ளதாக குற்றம் சாட்டினர்.
|