பாகிஸ்தானிடம் இருந்து ஓராண்டுக்குள் அணுகுண்டு வாங்க ஐ.எஸ். தீவிரவாதிகள் அதிரடி திட்டம்

அல்கொய்தா தீவிரவாதிகளை விட கொடியவர்கள் என அமெரிக்காவையே அலற வைத்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள், சிரியாவிலும், ஈராக்கிலும் தங்களது எல்லையை...







அல்கொய்தா தீவிரவாதிகளை விட கொடியவர்கள் என அமெரிக்காவையே அலற வைத்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள், சிரியாவிலும், ஈராக்கிலும் தங்களது எல்லையை விரிவுபடுத்தி வருகின்றனர்.

இந்த தீவிரவாதிகள் அமெரிக்காவிடம் இருந்தும், ஈரானிடம் இருந்தும் பீரங்கி வண்டிகள், ராக்கெட் லாஞ்சர்கள், ஏவுகணைகள், விமான எதிர்ப்பு பீரங்கிகள் என ஆயுதங்களை கைப்பற்றி குவித்துள்ளனர்.

இவர்களிடம் கோடிக்கணக்கில் பணம் உள்ளது. வங்கியில் குவித்துள்ள இந்த பணத்தைக் கொண்டு ஓராண்டுக்குள் பாகிஸ்தானிடம் இருந்து அணுகுண்டு வாங்க அதிரடி திட்டம் தீட்டி உள்ளனர்.

இது தொடர்பான தகவல், ஐ.எஸ். தீவிரவாதிகளின் ‘ஆன் லைன்’ பத்திரிகையான ‘தாபிக்’கில் வெளியாகி உள்ள கட்டுரையில் இடம் பெற்றுள்ளது.

அதில், ‘‘ஐ.எஸ். அமைப்பினர், வங்கியில் பல கோடி டாலர்களை குவித்து வைத்துள்ளனர். இந்தப் பணத்தை கொண்டு, அவர்கள் பாகிஸ்தானில் உள்ள தங்களது அமைப்பினரிடம் கூறி, அங்குள்ள ஆயுதத்தரகர்கள் மூலமாக ஊழல் அதிகாரிகளின் துணை கொண்டு அணுகுண்டு வாங்கப்படும்’’ என கூறப்பட்டுள்ளது.

அந்த அணுகுண்டை அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த பயன்படுத்த முடியும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

தலைப்பு செய்தி 6659279205422618761

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item