முஸ்லிம்களை அச்சுறுத்தும் பொது பல சேனாவின் அரசியல் கொள்கைகள்
பொது பல சேனா அமைப்பு தனது உத்தேச அரசியல் கட்சியின் கொள்கைகளை விளக்கியுள்ளது , இந்த நாட்டில் இனமுரண்பாட்டை தவிர்க்க நாட்டின் சனத்தொகை வளர்...

http://kandyskynews.blogspot.com/2015/05/blog-post_748.html

பொது பல சேனா அமைப்பு தனது உத்தேச அரசியல் கட்சியின் கொள்கைகளை விளக்கியுள்ளது , இந்த நாட்டில் இனமுரண்பாட்டை தவிர்க்க நாட்டின் சனத்தொகை வளர்ச்சியை ஒழுங்குபடுத்தும் சட்டமொன்றை அமுல்படுத்த வேண்டும். என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அந்த அமைப்பின் பொது செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இந்த நாட்டில் சனத்தொகை வளர்ச்சியை ஒழுங்குபடுத்தும் திட்டம் எம்மிடம் உள்ளது காரணம் நாட்டில் பல பகுதிகளில் சிங்களவர்கள் குறைவாக வாழ்கின்றனர் .
நாட்டில் இன ரீதியாக முடியாது என்பது போல மத ரீதியாகவும் வலயங்களை ஏற்படுத்திக் கொள்வதை தடை செய்ய வேண்டும். விவாகம் தொடர்பில் இந்த நாட்டில் ஒரு சட்டம் பின்பற்றப்படல் வேண்டும். இந்த நாட்டில் சிங்களவர்களுக்கு ஒரு சட்டமொன்றால், அது தமிழருக்கும், முஸ்லிம்களுக்கும் ஒரே மாதிரியானது. இது அரபு நாடு அல்ல என்பதனால் இவ்வாறுதான் இருக்க வேண்டும்.
அத்துடன், சமய சட்டங்களை சிவில் சட்டங்களாக ஆக்கிக் கொள்வதைத் தடை செய்ய வேண்டும். பொது இடங்களில் முகத்தை மூடிக் கொண்டு நடமாடுவதை இந்நாட்டில் தடை செய்யப்பட வேண்டும்
இந்த நாட்டில் அடிப்படைவாதக் குழுக்கள் செயற்பட்டு வருகின்றன. தற்பொழுது இவற்றின் எண்ணிக்கை 400 ஐயும் தாண்டியுள்ளது. முழுமையாக இவற்றை தடை செய்ய வேண்டும் என்ற ஒரு கருத்தை இந்த நாட்டில் உருவாக்க வேண்டியுள்ளது. போன்ற கருத்துக்களை தமது உத்தேச அரசியல் கட்சியின் கொள்கைகளாக முன்வைத்துள்ளார்
மேலும் கருத்துரைத்துள்ள அவர் , தற்போது தாம் பல அரசியல் கட்சிகளுடன் பேசி வருவதாகவும் ,ஆனால் பிரதான எந்த அரசியல் கட்சியுடனும் இணைந்து செயல்படப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார் .
இலங்கையில் முஸ்லிம் மற்றும் கிறித்தவ சமூகங்களுக்கு எதிராக இன ,மத வெறுப்பை தூண்டிவிடும் செயல்பாட்டிலும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ள குறித்த அமைப்பு மியன்மாரின் பயங்கரவாதத்தின் பெளத்த முகம் என வர்ணிக்கப்படும் விரது தேரருடன் நெருங்கிய உறவையும் உடன்படிக்கைகளையும் மேற்கொண்டுள்ள நிலையில் நாட்டின் இன, மத நல்லுறவுக்கு தொடர்ந்தும் பெரும் அச்சுறுத்தலாகவே பார்க்கப்படுகிறது.