நாட்டின் நன்மைக்காக மைத்திரியும் மஹிந்தவும் இணைந்து கொள்ள வேண்டும்!- கோத்தபாய ராஜபக்ச
நாட்டின் நன்மைக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் இணைந்து செயற்பட வேண்டுமென முன்னாள் பாதுகாப்புச்...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_989.html

இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசியல் சூழ்நிலை குழப்பம் நிறைந்ததாக அமைந்துள்ளது.
பொருளாதாரம் ஒரே இடத்தில் உக்கிப் போகும் வகையில் அமைந்துள்ளது.
எதிர்வரும் ஆறு ஆண்டுகளுக்கான ஜனாதிபதியாக மக்கள் மைத்திரிபால சிறிசேனவை நியமித்துள்ளனர். அவர் அந்த பதவியில் நீடிக்க வேண்டும்.
எனினும், உடனடியாக பொதுத் தேர்தல் ஒன்றை நடத்தி அதன் ஊடாக பிரதமராக மஹிந்த ராஜபக்சவை நியமிக்க வேண்டும்.
இவ்வாறான ஓர் நிலைமையின் கீழே மக்களின் தேவைகளை அரசாங்கத்தினால் பூர்த்தி செய்ய முடியும்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் 58 லட்சம் வாக்குகளைப் பெற்றுக்கொண்ட மஹிந்த ராஜபக்ச மீண்டும் சேவைக்கு வர வேண்டும்.
ஒரு புறத்தில் ரணில் விக்ரமசிங்க அரச நிர்வாகத்தை மேற்கொள்கின்றார், மறுபுறத்தில் சந்திரிக்கா, ராஜித மற்றும் சம்பிக்க ஆகியோரும் அரச நிர்வாகப் பணிகளை மேற்கொள்கின்றார்கள்.
எனினும் நாட்டில் அரசாங்கம் ஒன்று ஆட்சி செய்வதனை மக்கள் உணரவில்லை. மக்கள் இன்னமும் குழப்ப நிலையில் இருக்கின்றார்கள்.
எனவே மைத்திரியும் மஹிந்தவும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது நாட்டிற்கு மிகவும் முக்கியமானது என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate