வீதியோர சிறார்களை பயன்படுத்தி பணம் சம்பாதிப்பவர்களை கைது செய்ய நடவடிக்கை
நாட்டில் வீதியோர சிறார்களை பல்வேறு செயற்பாடுகளுக்கு ஈடுபடுத்துவதால் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவிக...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_126.html
நாட்டில் வீதியோர சிறார்களை பல்வேறு செயற்பாடுகளுக்கு ஈடுபடுத்துவதால் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவிக்கின்றது.
வீதியோர சிறார்களை பயன்படுத்தி சிலர் முறையற்ற வகையில் பணம் சம்பாதிப்பதாக அதிகார சபையின் தலைவர் நடாஷா பாலேந்திரன் தெரிவித்தார்.
அவ்வாறானவர்களை கைதுசெய்வதற்கு பொலிஸாருடன் இணைந்து சுற்றிவளைப்புக்களை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
வீதியோர சிறார்களை பயன்படுத்துபவர்கள் தொடர்பில் தகவல்கள் தெரிந்தால், சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் 1 9 2 9 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.