நாட்டில் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவ மக்கள் தொகை அதிகரிப்பதை கட்டுப்படுத்த அவர்களுக்கு கட்டாய கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று இந்து மகா...


முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவ மக்கள் தொகை அதிகரிப்பதை கட்டுப்படுத்த அவர்களுக்கு கட்டாய கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று இந்து மகாசபை தலைவர் சாத்வி தேவா தாகூர் தெரிவித்துள்ளார். அனைத்து இந்திய இந்து மகாசபையின் துணை தலைவர் சாத்வி தேவா தாகூர். அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
நாட்டில் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதை தடுக்க மத்திய அரசு அவரசர நிலையை பிரகடனப்படுத்தி முஸ்லீம், கிறிஸ்தவ மக்களுக்கு கட்டாய கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.
அவ்வாறு செய்தால் தான் அவர்களின் மக்கள் தொகை அதிகரிப்பதை கட்டுப்படுத்த முடியும். இதற்கிடையே இந்துக்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும். மசூதிகள் மற்றும் தேவாலயங்களில் இந்து கடவுள்களின் சிலைகளை வைக்க வேண்டும் என்றார்.
முன்னதாக மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு சிலை வைக்க வேண்டும் என்று கூறியவர் தான் இந்த சாத்வி தேவா தாகூர் என்பது குறிப்பிடத்தக்கது.