இஸ்லாமிய தேசத்தால் கொன்றொழிக்கப்படும் கிறிஸ்தவர்கள் - மனுவல் வால்ஸ்

நேற்றுப் பரிசில் நடைபெற்ற ஆர்மீனிய இனப்படுகொலையின் நூற்றாண்டு நினைவு கூறலில் பிரான்சின் பிரதமர் மனுவல் வால்ஸ் பங்குபற்றியிருந்தார். இதில்...


நேற்றுப் பரிசில் நடைபெற்ற ஆர்மீனிய இனப்படுகொலையின் நூற்றாண்டு நினைவு கூறலில் பிரான்சின் பிரதமர் மனுவல் வால்ஸ் பங்குபற்றியிருந்தார். இதில் உரையாற்றிய பிரதமர், ஈராக்கிலும் சிரியாவிலும் இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளால் கிறிஸ்தவரக்ள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்திருந்தார்.

"கிறிஸ்தவ இனமானது கிழக்கு நாடுகளில் இஸ்லாமியதேச ஜிகாதிப் பயங்கரவாதிகளால் அழித்தொழிக்கப்படுகின்றது. இதற்கான ஓர் முடிவை நாம் எட்டியாக வேண்டும். இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகள் அழித்தொழிக்கப்படல் வேண்டும். பிரான்ஸ் எப்பொழுதும் வீழ்ந்துபட்டவர்கள் பக்கம் நிற்கும். இன்று வீழந்துபடுபவர்கள் கிழக்கு தேசத்தின் கிறிஸ்தவர்கள். இதனை நாம் முறையாக உச்சரித்தல் வேண்டும். இதுவும் ஒரு சிறுபான்மையினர் மீது மெற்கொள்ளப்படும் இனப்படுகொலையாகும். இந்த உண்மைகள் வெளிக்கொண்டு வரப்படல்வேண்டும். இதே நிலைமையே பல சிறுபான்மை இனங்களின் மீது நடாத்தப்படும் இனப்படுகொலையாகும். இப்படியான இனப்படுகொலைகளைச் செய்யும், பயங்கரவாதிகள் முற்றாக அழித்தொழிக்கப்படல் வேண்டும். கிழக்குப் பகுதியில் சிரியாவிலும், ஈராக்கிலும் அதன் சுற்றுப்பகுதிகளிலும் கிறிஸ்தவ இனம் பெரும் பயங்கரவாதப் படுகொலைகளைச் சந்தித்த வண்ணம், அழித்தொழிக்கப்பட்டு வருகின்றது" என மிகவும் திடமாக இனப்டுகொலைகளிற்கு எதிராகப் பிரதமர் குரல் கொடுத்தார்.

"அதேநேரம் பிரான்ஸ், இந்தக் கிறிஸ்தவர்களை மீட்கும் நடவடிக்கையில் இறங்கியபின்னர்தான், சில வாரங்களிற்கு முன்னதாக, முதன்முறையாக, ஐ.நாவின் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில், கிறிஸ்தவர்களின் பாதுகாப்புப் பற்றிய விவாதம் எழுப்பப்பட்டுள்ளது. பிரான்ஸ் எப்பொழுதும் ஆபத்தில் சிக்குபவர்களை மீட்பதில் தயக்கம்காட்டாது" எனவும் பிரதமர் 
தெரிவித்துள்ளார்.

Related

தலைப்பு செய்தி 2575915748765919874

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item