அரசியல் சிக்கல்களுக்கு விரைவில் தீர்வு: பாராளுமன்றம் கலைக்கப்படும்: ஜனாதிபதி
தற்போது நாட்டில் தோன்றியிருக்கும் இக்கட்டான, அசாதாரண அரசியல் சூழ்நிலை விரைவில் முடிவுக்கு வரும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார் ஜனாதிபதி மைத...


19ம் திருத்தச் சட்ட மூலம் தொடர்பாக பல்வேறு கருத்து முரண்பாடுகள் தோன்றி அசாதாரண சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளமையை சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி, எதிர்வரும் 20ம் திகதியளவில் 19ம் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதும் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடாத்தப்படும் எனவும் அதன் மூலம் தற்போதைய அரசியல் சூழ்நிலை மாற்றமடையும் எனவும் இன்று பொலன்நறுவயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தல் நடக்குமா நடக்காதா எனும் சந்தேகத்திலேயே மாற்றங்களில் பங்கெடுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டும் கூட பெரும்பான்மைப் பலம் உள்ள ஐமசுமு தடைகளை உருவாக்கி வருவதாக கணிக்கப்படும் நிலையில் மாற்றங்களுக்கு எதிரான போக்குடையவர்களை அடையாளங் காட்ட இது சரியான சந்தர்ப்பம் என ஸ்ரீலசுகட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களும் கருதுவதாக சுட்டிக்காட்டும் அரசியல் அவதானிகள் பாராளுமன்றம் கலைக்கப்படுவது உறுதியானால் எதிர்ப்பவர்களும் தமது நிலைப்பாடுகளை மாற்ற நிர்ப்பந்திக்கப்படுவார்கள் எனவும் அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வாறாயினும் சிறுபான்மைப் பலத்துடன் இந்த அரசாங்கத்தை நீண்ட நாட்களுக்கு இழுத்துச் செல்ல முடியாது என்பதில் ஜனாதிபதி தெளிவான நிலைப்பாட்டில் இருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.