தோனியிடம் இருந்து கோஹ்லி கற்றுக்கொள்ள வேண்டும் – ஸ்டீவ்வோ
அவுஸ்திரேலியாவின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் தலைவர் ஸ்டீவ்வோ, இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தலைவர் விராட் கோஹ்லி தனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_775.html
அவுஸ்திரேலியாவின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் தலைவர் ஸ்டீவ்வோ, இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தலைவர் விராட் கோஹ்லி தனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது மற்றும் சிறந்த தலைவராக செயல்படுவதற்கு தோனியிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.
கடந்த டிசம்பரில் தோனி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றதை அடுத்து தலைவர் பொறுப்பை கோஹ்லி ஏற்றார்.
அவுஸ்திரேலிய அணி உலகக்கிண்ணத்தை வென்றபோது தலைவராக இருந்த ஸ்டீவ்வோ, லோரியஸ் உலக விளையாட்டு விருதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது செய்தியாளர்களிடம் கூறுகையில், இளம் வீரரான கோஹ்லி நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
அவர் இம்முறை இடம்பெற்ற உலகக்கிண்ண போட்டிகளின் போது சில விடயங்களில் அதிக உணர்ச்சிவசப்பட்டதுடன் அதிக ஆற்றலுடனும் தனித்தும் இயங்கினார்.
ஒரு தலைவராக அதிக சக்தி மிக்கவராக அவர் இருக்க வேண்டும், தோனிக்கு அது உண்டு அவருக்குள் எதுவும் ஊடுருவ முடியாது எனவே, கோஹ்லிக்கு சிறந்த முன்மாதிரியாக தோனி இருப்பார்.
கோஹ்லி தன் வழியில் சென்றாலும், தோனியிடம் இருந்தும் சில விடயங்களை கற்றுக் கொள்ள வேண்டும்.
மக்கள் கூறுவது குறித்து தோனி கருத்தில் கொள்வதில்லை வெளிப்புற விடயங்கள் அவரை பாதிப்பதில்லை அதனை சாதாரணமாக எடுத்து கொண்டு, தனது பணியை சிறப்பாக முடிக்க செல்கிறார் அதனால் தான் மைதானத்தில் அவரால் நன்றாக விளையாட முடிகிறது.
கோஹ்லி உணர்ச்சிமயமாக இருப்பதை நான் ரசிக்கிறேன் அவர் அதனை இழக்க வேண்டியதில்லை ஆனால், அவர் மேற்கொள்ளும் பணியின் வழியிலேயே கொஞ்சம் சிறப்பாக செயல்பட வேண்டும் என கூறியுள்ளார்.
அவுஸ்திரேலிய அணி வீரர் மைக்கல் கிளார்க் காயம் காரணமாக பெரும்பாலான போட்டிகளில் விளையாடாத நிலையில், அந்த அணி இளம் வீரர் ஸ்டீவன் ஸ்மித் தலைமையில் விளையாடி வருகிறது.
கோஹ்லி மற்றும் ஸ்மித் ஆகிய இருவரையும் ஒப்பிட்டு பேசிய அவர், அவர்கள் இருவரும் வேறுபட்ட திறமைகளை கொண்டவர்கள் ஒருவர் தனது உணர்ச்சிகளை கட்டுக்குள் வைத்திருப்பவராகவும் மற்றொருவர் தனது உணர்ச்சிகளை எப்பொழுதும் வெளிக்காட்டுபவராகவும் இருக்கிறார்.
இருவரும் சிறந்த விளையாட்டு வீரர்கள் கோஹ்லி சிறந்த உத்திகளை பயன்படுத்துகிறார் ஸ்மித் தனி திறனுடன் செயல்படுகிறார் எனவே இருவருக்கும் தனிப்பட்ட திறமைகள் உள்ளன.
இந்தியாவின் பயிற்சியாளர் பொறுப்பு கிடைத்தால் ஏற்று கொள்வீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அது குறித்து நான் சிந்திக்கவில்லை இதுவரை அந்த பொறுப்புக்கு தகுதியானவனாக நான் இல்லை கிரிக்கெட் விளையாட்டு குறித்து நன்கு அறிந்தவனாக நான் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.