மொரட்டுவ பகுதியில் தங்க நகைகளை கொள்ளையிட்டுச் சென்ற சந்தேகநபர் கைது
மொரட்டுவ பகுதியில் நிதி நிறுவனம் ஒன்றினுள் புகுந்து துப்பாக்கி முனையில் பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையிட்டுச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கை...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_71.html

மிரிஹான விசேட குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேகநபர் நேற்று (04) கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
ரீ- 56 ரக துப்பாக்கி ஒன்றும் 20 தோட்டாக்களும் 75 கிராம் தங்கமும் சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
கைது செய்யப்பட்ட ஹோமாகம பகுதியை சேர்ந்த குறித்த சந்தேகநபர் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
மொரட்டுவ பகுதியிலுள்ள நிதி நிறுவனம் ஒன்றினுள் புகுந்த இரண்டு சந்தேகநபர்கள் கடந்த மாதம் 17 ஆம் திகதி கொள்ளையிட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது


Sri Lanka Rupee Exchange Rate