யேமனிலுள்ள இலங்கையர்கள் இன்று இலங்கைக்கு அழைத்துவரப்படவுள்ளனர்
யேமனில் இடம்பெற்றுவரும் மோதலினால் நிர்க்கதியாகியுள்ள 59 இலங்கையர்கள் சீன விமானத்தினூடாக பஹ்ரேனுக்கு இன்று (05) அழைத்து செல்வதற்கு தீர்மான...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_67.html

யேமனில் இடம்பெற்றுவரும் மோதலினால் நிர்க்கதியாகியுள்ள 59 இலங்கையர்கள் சீன விமானத்தினூடாக பஹ்ரேனுக்கு இன்று (05) அழைத்து செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிக்கின்றது.
பஹ்ரேனுக்கு அழைத்து செல்லப்படும் இலங்கையர்கள் இன்று (05) இரவு நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளதாக பணியகத்தின் தலைவர் நந்தபால விக்ரமசூரிய குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 75 தொடக்கம் 100 வரையான இலங்கை பணியாளர்கள் யேமனில் உள்ளதாக உத்தியோகபூர்வ தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இவர்களை நாட்டிற்கு மீள அழைத்துக் கொள்வதற்காக இந்தியா மற்றும் சீன அரசாங்கங்களின் உதவியை கோரியதாகவும் நந்தபால விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.
அதன்படி சீன அரசின் உதவியுடன் 59 பேர் இன்று நாட்டிற்கு அழைத்துவரப்படுவார்கள் எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஆபிரிக்காவின் வடக்கு பிராந்தியங்களில் தங்கியுள்ள இலங்கையர்களையும் நாட்டிற்கு அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனினும் அந்தப் பகுதிகளில் உள்ள இலங்கையர்கள் தற்போது பாதுகாப்பாக உள்ளதாகவும் அவர்கள் விரும்பினால் மாத்திரமே நாட்டிற்கு மீள அழைக்கப்படுவார்கள் என பணியகத்தின் தலைவர் நந்தபால விக்ரமசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate