குற்றங்களுக்கு மிக கடுமையான தண்டனை வழங்கும் முதல் நாடான சவுதி அரேபியாவில் இன்று காரில் வந்த மர்ம மனிதர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இ...
குற்றங்களுக்கு மிக கடுமையான தண்டனை வழங்கும் முதல் நாடான சவுதி அரேபியாவில் இன்று காரில் வந்த மர்ம மனிதர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு போலீசார் பலியாகினர். இன்று அதிகாலை 1.30 மணியளவில் தலைநகர் ரியாத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் வாகனத்தின் மீது மற்றொரு காரில் வந்த மர்ம நபர்கள் நடத்திய அதிரடி துப்பாக்கிச் சூட்டில் தாமெர் அம்ரான் அல் முட்டைரி மற்றும் அப்துல் மோஷென் கலாப் அல் முட்டைரி ஆகிய இரு போலீசார் கொல்லப்பட்டதாக சவுதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த மாதமும் இதே போல் சில மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 போலீசார் உயிரிழந்தது நினைவிருக்கலாம்.