எந்தக் குற்றத்தையும் செய்யவில்லை – கோதபாய
எந்தக் குற்றச் செயலையும் மேற்கொள்ளவில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தாம் நேர்மையாக கடமையாற்றிய ஓர...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_598.html

எந்தக் குற்றச் செயலையும் மேற்கொள்ளவில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தாம் நேர்மையாக கடமையாற்றிய ஓர் அரச அதிகாரி அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டால் நன்றாக பணியாற்றும் ஏனைய அரச உத்தியோகத்தர்கள் அதிருப்தி அடைவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
தமக்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கில் வந்த அனைவருக்கும் நன்றி பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார். லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிற்கு வாக்கு மூலம் அளிக்கச் சென்று கால அவகாசம் வழங்குமாறு கோரி திரும்பிய போது, விசாரணைகளுக்கு எதிர்ப்பை வெளியிட்டு போராட்டம் நடத்தி வரும் மக்களிடம் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
“எங்கள் வீரன்”, “எங்கள் சிங்கம்” என கோசமெழுப்பி கோதபாயவிற்கு குழுமியிருந்தவர்கள் உற்சாக ஆதரவு வழங்கியுள்ளனர்.
எதீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் முன்னாள் அமைச்சர்களான பந்துல குணவர்தன மற்றும் டலஸ் அழப்பெரும ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.


Sri Lanka Rupee Exchange Rate