“நான் இன்னும் ஓய்வுபெறவில்லை” – மீண்டும் வருவேன் என்று சூசகமாக மிரட்டுகிறார் மகிந்த
தாம் இன்னமும் அரசியலில் இருந்து ஓய்வுபெறவில்லை என்று, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஏஎவ்பி செய்தியாளர...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_708.html
தாம் இன்னமும் அரசியலில் இருந்து ஓய்வுபெறவில்லை என்று, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஏஎவ்பி செய்தியாளர் அமால் ஜெயசிங்கவுக்கு நேற்று அளித்த செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
”என் மீதும் எங்கள் குடும்பத்தினர் மீதும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அவர்களிடம் எந்த ஆதாரங்களும் இல்லை.
அவர்கள் பெரியளவிலான குற்றச்சாட்டுகளைக் சுமத்துகின்றனர். இது ஒரு சூனிய வேட்டை போல இருக்கிறது.
நானோ எனது குடும்பத்தினரோ சட்டரோதமாக பணம் சம்பாதிக்கவில்லை. முதலில், நான் சுவாசிலாந்தில், நிதியை வைத்துள்ளதாக கூறினர். பின்னர் டுபாயில் என்றனர். அந்த நிதியைக் காட்டுங்கள். எங்கே அதற்கான ஆதாரங்கள்?
டுபாயில் எனக்கு விடுதி ஒன்று உரிமையாக இருப்பதாக, அவர்கள் கூறுகின்றனர். பின்னர் சிறிலங்காவில் உள்ள விடுதிகள் அனைத்தும், எனக்கும், எனது சகோதரர்களாக கோத்தாபய, மற்றும் பசிலுக்கும் சொந்தமானது என்றனர். இது ஒரு நகைச்சுவை.
நான் இந்தியாவை இழந்து சீனாவுடன் நட்பு பாராட்டவில்லை.
நான் சீனாவுக்குச் சாதகமாக நடந்து கொள்ளவில்லை. ஆனால், எனது இதயத்தில், சிறிலங்காவின் நலன்கள் மட்டுமே இருந்தது.
எல்லா பெரிய திட்டங்களையும் முதலில் இந்தியாவிடம் தான் வழங்கினோம். ஆனால், அவர்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.
முன்கூட்டியே அதிபர் தேர்தலை நடத்த நான் முடிவெடுத்தது ஒரு மோசமான தவறு. அதற்காக நான் வருந்துகிறேன்.
எனது சோதிடர், தேர்தல் நாள் சுபநேரமாக இருக்கும் என்று பரிந்துரைத்திருந்தார். இப்போது நாள் எல்லா சோதிடர்கள் மீதும் நம்பிக்கை இழந்துள்ளேன்.
நான் இன்னமும் அரசியலில் இருந்து ஓய்வுபெறவில்லை. நான் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறேன்.
புதிய அரசாங்கத்தின் கீழ், நிறைய உறுதியற்ற அரசியல் நிலைமைகள் ஏற்பட்டுள்ளன. உறுதிப்பாட்டை ஏற்படுத்துவதற்கு விரைவாக நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.