கிறிஸ்துவர்களை கட்டாயப்படுத்தி கொல்லும் அவலம்: இஸ்லாமியர்களின் வெறிச்செயல்
லிபியாவில் இருந்து தப்பிச்சென்ற படகில் பயணித்த இஸ்லாமியர்கள், 12 கிறிஸ்துவர்களை கடலில் தள்ளி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....


லிபியாவில் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால் அங்கிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இத்தாலிக்கு படகில் அகதிகளாய் தப்பி செல்கின்றனர்.
இந்நிலையில் கடந்த 14ம் திகதி ரப்பர் படகு ஒன்றில் 105 பேர் இத்தாலிக்கு பயணித்துள்ளனர்.
மத்திய தரைக்கடலின் வடக்கு பகுதியில் படகு சென்றுகொண்டிருந்தபோது, படகில் இருந்த 15 இஸ்லாமியர்கள், திடீரென தங்களுடன் பயணித்த 12 கிறிஸ்தவர்களையும் வலுக்கட்டாயமாக பிடித்து கடலில் தள்ளிக் கொலை செய்துள்ளனர்.
இந்த தகவல் இத்தாலிய கப்பற்படையினருக்கு தெரியவந்ததையடுத்து, நடுக்கடலில் படகை மடக்கி 15 பேரை கைது செய்துள்ளனர்.
மேலும் படகில் பயணித்த மற்றவர்கள் வேறொரு கப்பலில் ஏற்றிவிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.