தேர்தல் நடத்தப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: மாதுலுவாவே சோபித தேரர்
தேர்தல் நடத்தப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டே ஸ்ரீ நாக விஹாரையின் விஹாரதிபதி மாதுலுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார்...

http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_51.html

100 நாள் வேலைத்திட்டத்தில் அளிக்கப்பட்ட சகல வாக்குறுதிகளையும் அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்.
அரசாங்கம் இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாது அவசர தேர்தல் ஒன்றை நடாத்த முயற்சித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசாங்கத்தின் தேர்தல் குறித்த முனைப்புக்கள் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை திருத்துதல், 17ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தல், புதிய தேர்தல் முறைமை ஒன்றை அறிமுகம் செய்தல் ஆகியன புதிய அரசாங்கம் தேர்தல் காலத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளாகும். இந்த வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்.
நாட்டு மக்களும், இந்த அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்த முயற்சித் தரப்புக்களும் அவசர தேர்தல் ஒன்றை எப்போதும் கோரவில்லை.
நாடாளுமன்றை கலைத்து தேர்தல் நடத்த போதியளவு கால அவகாசம் இருக்கின்ற நிலையில், அவசர அவசரமாக 100 நாள் வேலைத் திட்டத்தை நிறைவேற்றாது தோ்தல் நடத்துவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என மாதுலுவாவே சோபித தேரர் சிங்கள பத்திரிகையொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்