புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட ஆயுதங்கள் வெளிநாட்டு கிளர்ச்சிக் குழுக்களுக்கு விற்பனை?
இறுதிக்கட்ட போரின் பின்னர் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட ஆயுதங்கள் வெளிநாட்டு ஆயுத குழுக்களுக்கு விற்கப்பட்டதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அ...


இது குறித்து மோசடி தடுப்பு விசாரணை குழுவும், குற்ற புலனாய்வு பிரிவினரும் விசாரணை நடத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
உக்ரேன் இலங்கை தூதுவர் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதம் வழங்கிய விடயம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. அவரை தேடி வருகிறோம். இது குறித்து உக்ரேன் அரசு எமக்கு அறிவித்துள்ளது.
இலங்கையிலும் அண்மையில் ஆயுதக் கப்பல்கள் பிடிக்கப்பட்டன. வேறு நாட்டு அரசாங்கங்களுடன் ஆயுத கொடுக்கல் வாங்கல் செய்ததாக கோத்தபாய கூறியிருந்தார்.
நைஜீரியாவுக்கு ஆயுதம் வழங்கியதாகவும் கூறப்பட்டது. ஆனால், நைஜீரிய போகோஹராம் அமைப்பிற்கு ஆயுதம் வழங்கியதாக சந்தேகம் இருக்கிறது.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட ஆயுதம் மற்றும் நகைகளுக்கு என்ன நடந்தது என தகவல் கிடையாது.
இவை வேறு நாட்டு ஆயுத குழுக்களுக்கு கடல் நடுவில் வைத்து விற்கப்பட்டதா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து சி.ஐ.டி. மோசடி தடுப்பு விசாரணை குழு என்பன விசாரணை நடத்தி வருகிறது.
உக்ரேன் தூதரக ஊழியரின் மரணம் குறித்தும் விசாரணை நடைபெறுகிறது. அவரது பிரேத பரிசோதனை கிடைக்கும் வரை காத்திருக்கிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.