பசில் ராஜபக்ஸ கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றம்
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ சிறைச்சாலை வைத்தியசாலையில் இருந்து மாற்றப்பட்டு தற்போது கொழும்பு வைத்தியசா...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_489.html

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ சிறைச்சாலை வைத்தியசாலையில் இருந்து மாற்றப்பட்டு தற்போது கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேசிய வைத்தியசாலையின் பணம் செலுத்தும் பிரிவில் பசில் ராஜபக்ஸவை அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் மற்றும் ஏனைய இரண்டு சந்தேகநபர்களும், கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அவர்களை சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்படுத்துவதற்கான உத்தரவை கடுவெல நீதவான் நீதிமன்றம் வழங்கியதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ரோஹன புஷ்பகுமார தெரிவித்தார்.


Sri Lanka Rupee Exchange Rate