அரச செலவில் பெற்றோருக்கு அருங்காட்சியகம் அமைத்த கோத்தபாய
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தனது பெற்றோர் வாழ்ந்த வீரகெட்டிய வீடு மற்றும் கல்லறைகள் அடங்கிய வீட்டுச் சூழலை அருங்காட்சி...


கணக்குகளில் வீரகெட்டிய திட்டம் என்ற பெயரில் இருக்கும் இந்த திட்டத்தின் பணிகள் 2014 பெப்ரவரி 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஆகியோரின் தந்தையின் 47வது சிரார்த்த தினமான 2014 நவம்பர் 06 ஆம் திகதி இந்த அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டது.
கடற்படையின் மனித வளத்தில், கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்திற்கான செலவுகள் காணிகளை நிரப்புதல் மற்றும் அபிவிருத்தி செய்தல் கூட்டுத்தாபானத்தின் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளன.
செலவுகள் கீழே தரப்பட்டுள்ளன.
மூலப் பொருட்களுக்கான செலவுகள் – 472,85,553
போக்குவரத்து செலவுகள் – 3,21,056
தொழிலாளர்களுக்கான செலவுகள் (கூட்டுத்தாபனம்) – 12,46,650
இயந்திர செலவுகள் – 78,82,310
எரிபொருள் செலவு – 48,11,310
நீர்மின் செலவுகள்- 600
படிச் செலவுகள் – 1,61,936
மொத்தம் – 617,10,096
இதனை தவிர அங்கு நிர்மாணிக்கப்பட்ட தாடகம் உட்பட அலங்காரத்திற்காக செலவிடப்பட்ட தொகை விபரம்.
தாடகத்திற்கு வர்ண மீன்களுக்கான செலவு ஒரு லட்சம் ரூபா, தடாகத்தை நிர்மாணித்த செலவு மூன்று லட்சத்து 49 ஆயிரத்து 200 ரூபா.
இரண்டு கிரிஸ்டல் கற்களை கொள்வனவு செய்து பொருத்தியமைக்கான செலவு 92 லட்சத்து 40 ஆயிரத்து 822 ரூபா.
சூரிய சக்தியில் மின்சாரத்தை பெறுவதற்காக இயந்திரங்களை கொள்வனவு செய்தமைக்கான செலவு 53 லட்சத்து 72 ஆயிரத்து75 ரூபா.
நகர அபிவிருத்தி அமைச்சு கட்டணம் செலுத்தாது பெற்றுக்கொண்டு 15 ஆயிரம் கருங்கற்களுக்கான செலவு 41 லட்சத்து 25 ஆயிரம் ரூபா.
எவ்வாறாயினும், இந்த செலவு விபரத்தில் செதுக்கிய கருங்கற்களுக்காக நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு செலுத்த வேண்டிய தொகை குறிப்பிடப்படவில்லை. அதனையும் சேர்த்தால் கடற்படையினர் மனித வளத்திற்கான செலவுகள் இல்லாமல் மொத்தமாக 750 லட்சம் ரூபா இந்த திட்டத்திற்கு செலவிடப்பட்டுள்ளது.