மைத்திரியை பொம்மையாக்கும் திட்டமில்லை: சஜித்
ஆட்சிக்கு வந்து குறுகிய காலத்திலேயே மக்களின் நன்மதிப்புக்கு ஆளான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எந்தவொரு அதிகாரமுமில்லாத பொம்மையாக்குவதற...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_21.html

ஹம்பாந்தோட்டை தெம்பரவெவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது நாங்கள் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கமைவாக ஊழல் மோசடிகளில் ஈடுப்பட்ட அனைத்து தரப்பினரையும் பாரபட்சம் பார்க்காது தண்டனை வழங்குவதில் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமுர்த்தி அமைச்சின் ஊடாக சமுர்த்தி வங்கிகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள 72 ஆயிரம் மில்லியன் ரூபா நிதியை திவிநெகும, சமுர்த்தி சலுகைகளை பெறுவோருக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக 200 சதவீத சலுகைகளை வழங்குவதாக நாம் அளித்த வாக்குறுதிக்கமைய இம்மாத ஆரம்பத்திலேயே 14 இலட்சத்து 78 ஆயிரத்து 14 பேருக்கு சலுகை வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல்மயப்படுத்தலிலிருந்து சமுர்த்தி துறை நீக்கப்பட்டுள்ளதுடன், திறமையின் அடிப்படையில் பதவியுயர்வு, மற்றும் இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்தும் நோக்கத்தின் அடிப்படையில் ஜனாதிபதியின் அதிகாரங்களை நீக்கி பாராளுமன்றத்திற்கு வலுச்சேர்க்கும் கட்டமைப்பை உருவாக்கவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினால் நாட்டிற்கு ஏற்படும் பாதகமான விளைவுகளை நீக்கி இலங்கையில் புதிய அரசியல் கலாச்சாரமொன்றை ஏற்படுத்துவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இருந்த போதிலும், மக்களின் நன்மதிப்பினால் வெற்றி பெற்ற மைத்திரிபால சிறிசேனவை அதிகாரங்களற்ற பொம்மையாக்க முற்படவில்லை எனவும், நடைமுறையிலுள்ள ஜனாதிபதி முறைமையில் காணப்படுகின்ற எல்லை மீறிய அதிகாரங்களை நீக்குவதற்கே தீர்மானித்துள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்


Sri Lanka Rupee Exchange Rate