உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறப்பட்டதாக பந்துல தெரிவிப்பு: ஆராய்வதாக ரணில் பதில்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் மீறப்படுவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இன்று பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் போது...



நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் மீறப்படுவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இன்று பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் போது தெரிவித்துள்ளார்.
அண்மையில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு முன்பாக மக்கள் ஒன்றுகூடியபோது, தாம் அங்கு சென்றமைக்காக தம்மை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டமை சிறப்புரிமை மீறலாகுமென தெரிவித்தார்.

அத்துடன், மக்கள் ஒன்றுகூடும் இடத்திற்கு செல்லும் உரிமை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு காணப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் ரணில், இவ்விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் தான் ஆராய்வதாக குறிப்பிட்டார்.

கடந்த 23ம் திகதி கோத்தபாய ராஜபக்ஷவை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு உத்தரவிட்டபோது, ஆணைக்குழுவிற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

நீதிமன்ற உத்தரவையும் மீறி குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட குற்றத்திற்காக, நாடாளுமன்ற உறுப்பினர்கள், பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 26 பேருக்கு நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Related

தலைப்பு செய்தி 7424145852359616010

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item