மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்து: சிறுவன் உயிரிழப்பு
பொத்துவில் – அக்கரைப்பற்று பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். மோ...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_162.html

மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளை செலுத்திய 16 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.
காயமடைந்தவர்கள் திருக்கோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேதப் பரிசோதனைகள் இன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
திருக்கோவில் பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Sri Lanka Rupee Exchange Rate