விடுவிக்கப்பட்ட படகுகளுடன் தமிழக மீனவர்கள் நாடு திரும்பினர்
இலங்கையில் விடுவிக்கப்பட்ட 16 படகுகளுடன் தமிழக மீனவர் குழு நாடு திரும்பியுள்ளது. கடற்படையினரால் கைப்பற்றப்பட்டிருந்த தமிழக மீனவர்களின் 8...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_412.html

கடற்படையினரால் கைப்பற்றப்பட்டிருந்த தமிழக மீனவர்களின் 80 படகுகள் இந்த வருட முற்பகுதியில் விடுவிக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து இலங்கைக்கு வருகைதந்த தமிழக மீனவர்கள் 34 படகுகளை தமிழகத்திற்கு கொண்டுசென்றனர்.
எஞ்சிய படகுகளில் 30 படகுகளை மீண்டும் தமிழகத்திற்கு கொண்டு செல்வதற்காக தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்கள் உள்ளிட்ட 143 பேர் இந்த வாரம் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர்.
எவ்வாறாயினும், பழுதுபார்க்கப்பட்ட 16 படகுகளுடன் அவர்கள் மீண்டும் நாடு திரும்பியதாக இராமேஸ்வரத்திலுள்ள எமது செய்தியாளர் கூறினார்.
விடுவிக்கப்பட்ட படகுகளை மீண்டும் கொண்டுசெல்வற்கு ஒத்துழைப்பு வழங்கிய இலங்கை அரசாங்கத்திற்கும் இலங்கை கடற்படையினருக்கும் தமிழக மீனவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
இலங்கை கடற்பரப்பில் தொடர்ந்தும் காணப்படுகின்ற தமது படகுகளை பாதுகாப்பாக வைக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் இராமேஸ்வரத்தில் உள்ள எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.


Sri Lanka Rupee Exchange Rate