நேபாள நிலநடுக்கத்தில் 650 பேர் பலி

நேபாளத்தில் 7.9 ரிக்டர் அளவில்ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 650 ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இடிபாடுகள் காரணமாகப் பலர் காயமடைந்திருப...

நேபாளத்தில் 7.9 ரிக்டர் அளவில்ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 650 ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இடிபாடுகள் காரணமாகப் பலர் காயமடைந்திருப்பதாகவும் ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

மீட்புப் பணிகள் இடம்பெற்று வரும் நிலையில், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அச்சம் வௌியிடப்பட்டுள்ளது.

இந்தக் கடுமையான நிலநடுக்கத்தினால் காத்மாண்டு உள்ளிட்ட பல இடங்களில் கட்டிடங்கள், கோவில்கள் இடிந்து வீழ்ந்துள்ளன.

காத்மாண்டு விமான நிலையமும் மூடப்பட்டுள்ளது.

காத்மாண்டுவில் இருந்த19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான 9 மாடிக் கட்டிடமான “தரகரா” டவர் முழுமையாக இடிந்து வீழ்ந்துள்ளது.

அக்கட்டிடத்தில் இருந்த 400 பேர் மண்ணோடு மண்ணாக புதையுண்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.


இந்தியாவின் வட பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர், மகாராஷ்டிர மாநிலத்தில் நாக்பூர் மாவட்டம், உத்தரப்பிரதேசம், ஒடிசா, சிக்கிம், லக்னோ, கொல்கத்தா, பிஹார், ராஜஸ்தான், ஆந்திரப்பிரதேசம், மணிப்பூர், நாகாலாந்து, இமாச்சல பிரதேசம், பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

நில நடுக்கம், நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள பொகாரா எனும் பகுதியில் இருந்து 80 கி.மீ., தொலைவில் பூமிக்கு அடியில் 31 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, இரண்டாவது முறையாக உணரப்பட்ட நிலநடுக்கம் லாம்ஜங்க் பகுதியில் மையம் கொண்டிருந்தாகக் கூறப்பட்டுள்ளது.













Related

தலைப்பு செய்தி 565212443377030335

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item