நேபாளத்தில் நிர்க்கதியான 46 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
நில அதிர்வினால் பாதிக்கப்பட்டு நிர்க்கதிக்குள்ளான நேபாள மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கச் சென்ற இலங்கை விமானம் நாடு திரும்பியுள்ளது. ...
http://kandyskynews.blogspot.com/2015/04/46.html

சற்று நேரத்திற்கு முன் குறித்த விமானம் நாடு திரும்பியுள்ளதாக நேபாளத்தில் உள்ள இலங்கைத் தூதுவர் டபிள்யூ. செனவிரத்ன தெரிவித்தார்.
நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான நில அதிர்வினையடுத்து, அங்கு நிர்க்கதிக்குள்ளான இலங்கை 19 வயதிற்கு உட்பட்ட மகளிர் கால்பந்து அணி வீராங்கனைகள் 14 பேருடன் சேர்த்து, மொத்தம் 46 பேர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
நேபாளத்துக்கு மருத்துவ உதவிகளை மேற்கொள்ளச் சென்ற இலங்கை விமானப்படையின் ஏசி130 விமானம் தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக மீண்டும் இலங்கை திரும்ப முடியாத நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Sri Lanka Rupee Exchange Rate