கனடா- ஞாயிற்றுகிழமை 17-வது மாடியில் இருந்து விழுந்த 3-வயது சிறுவன்
கனடா- ஞாயிற்றுகிழமை 17-வது மாடியில் இருந்து விழுந்த 3-வயது சிறுவன் மரணமடைந்த துர்ச்சம்பவம் நடந்தது. இந்த சோகம் நடந்த போது குடும்பத்தினர...
http://kandyskynews.blogspot.com/2015/04/17-3.html
கனடா- ஞாயிற்றுகிழமை 17-வது மாடியில் இருந்து விழுந்த 3-வயது சிறுவன் மரணமடைந்த துர்ச்சம்பவம் நடந்தது. இந்த சோகம் நடந்த போது குடும்பத்தினர் அவனது சகோதரியின் பிறந்தநாளை கொண்டாடி கொண்டிருந்தனர்.
பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக குடும்ப நண்பர்கள் ஒன்று கூடி இருந்த நேரத்தில் வலஸ் பசொஸ் என்ற 3-வயது சிறுவன் வீட்டின் முகப்பறையில் ஓடி விளையாடிக் கொண்டிருந்துள்ளான். இந்த சமயத்தில் தான் யன்னல் வழியாக வெளியே விழுந்ததாக இக்குடும்ப நண்பரான ஜசிக்கா லோப்ஸ் தெரிவித்துள்ளார்.
வலஸ் ஒரு துடிப்பான சிறுவன் எனவும் கூறினார்.
வெப்பமாக இருந்த காரணத்தால் யன்னல் திறந்து விடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.அனைவரும் சந்தோசமாகவும் சிரித்தவண்ணமும் இருந்தனர்.திடீரென வலஸ் எங்கே என்ற கேள்வி எழுந்துள்ளது. அவனின் தந்தை கீழே ஓடினார்.அவன் எப்படி விழுந்தான் என்பது தெரியவில்லை என லோப்ஸ் கூறினார்.
கட்டிடத்தில் பல்கனிகள் இல்லை. ஞாயிற்றுகிழமை பிற்பகல் 2-மணியளவில் இந்த உயிர்பறித்த வீழ்ச்சி நிகழ்ந்தது.
பிரேத பரிசோதனை இன்று நடைபெறுகின்றது.