குர்ஆன் ஓதும் போட்டியில் முதற் பரிசு பெற்ற ஹிந்து மாணவி

-டெக்கான் க்ரோனிகல் ஆந்திர பிரதேசம் விஜய வாடாவில் ஒரு இஸ்லாமிய தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருபவர் கே.ஸ்வர்ண லஹரி. ...



in

-டெக்கான் க்ரோனிகல்

ஆந்திர பிரதேசம் விஜய வாடாவில் ஒரு இஸ்லாமிய தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருபவர் கே.ஸ்வர்ண லஹரி. அந்த பள்ளியில் குர்ஆன் ஓதும் போட்டி நடைபெற்றது. அதில் தானும் கலந்து கொள்வதாக ஆசிரியைகளிடம் சொன்னாள் ஸ்வர்ண லஹரி. மகிழ்ந்த ஆசிரியைகள் இந்த மாணவிக்கு குர்ஆனை ஓத பயிற்சி கொடுத்தனர். ஆச்சரியமாக 200 மாணவிகள் கலந்து கொண்ட அந்த போட்டியில் பலரையும் பின்னுக்கு தள்ளி விட்டு பரிசை தட்டிச் சென்றார் ஸ்வர்ண லஹரி. இவர் குர்ஆனை ஓதும் அழகைப் பார்த்து முஸ்லிம்களே ஆச்சரியப்பட்டனர்.

பரிசு வென்ற ஸ்வர்ண லஹரி கூறுகிறார் ‘நான் கோவிலுக்கும் செல்கிறேன். குர்ஆனை தொடர்ந்து ஓதி வருகிறேன். இன்னும் சில ஆண்டுகளில் அதன் பொருள் உணர்ந்து படிக்க தொடங்கி விடுவேன். என்னை இந்த அளவு ஊக்கப்படுத்திய எனது தந்தைக்கும் எனது ஆசிரியைகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்கிறார்.

ஸ்வர்ண லஹரியின் தந்தை துர்கா பிரசாத் கூறுகிறார்:

‘பலரும் எனது மகளை பாராட்டி மகிழும் போதுதான் எனது மகள் எவ்வளவு அழகிய பணியை செய்துள்ளாள் என்பது விளங்குகிறது. அவளது திறமையைக் கண்டு மொத்த ஆடிட்டோரியமும் நானும் ஆச்சரியத்தில் ஆழ்ந்து போனோம். இதற்கு முன்னால் நான் குர்ஆனைப் பார்த்ததில்லை. எனது மகள் எனக்கு குர்ஆனை அறிமுகப்படுத்தினாள். அவளது ஆர்வத்துக்கு நான் குறுக்கே நிற்கவில்லை. மாறாக உற்சாகப்படுத்தினேன். எனது நம்பிக்கையானது தனிப்பட்ட ஒன்று. உலக முடிவு நாளில் அனைத்து மதங்களும் ஒரே கோட்டில் சந்திக்கும்’ என்கிறார்.

மகளும் தந்தையும் அனைத்து செல்வங்களும் பெற்று சிரமமின்றி நேர் வழியில் தங்களின் வாழ்வை அமைத்துக் கொள்ள நாமும் பிரார்த்திப்போம்.

Related

இஸ்லாம் 8879333525936385220

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item