போதைப்பொருள் விநியோக கைது : 56 % சிங்களவர் ,26 % தமிழர் ,19 % முஸ்லிம்கள்- 65,998 இலங்கையர்
கடந்த 2013 ஆம் ஆண்டு இலங்கையில் போதைப் பொருள் பாவனை மற்றும் விநியோகம் தொடர்பிலான குற்றச்செயல்களுக்காக கைது செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை...
http://kandyskynews.blogspot.com/2015/03/56-26-19-65998.html
கடந்த 2013 ஆம் ஆண்டு இலங்கையில் போதைப் பொருள் பாவனை மற்றும் விநியோகம் தொடர்பிலான குற்றச்செயல்களுக்காக கைது செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை 65 ஆயிரத்து 998 என்பதுடன் இது 2012 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 38 சதவீத அதிகாரிப்பாகும்
இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் இன ரீதியாக முஸ்லிம்கள் பரவலாக பேசப்படும் நிலையில் தரவுகளின் அடிப்படையில் அதனை நோக்குவோம்
அரசாங்கத்தின் தரவுகளின் அடிப்படையில் சிங்களவர்கள் 2009 ஆம் ஆண்டளவில் 15, 266 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அதன் தொகையானது 2013 ஆம் ஆண்டில் கைது செய்யப்படவர்கள் எண்ணிக்கை 36,859 ஆக அதிகரித்துள்ளது . இது பாரிய அதிகரிப்பாகும்.
இதேவேளை தமிழர்களை நோக்கும்போது 2009 ஆம் ஆண்டளவில் 1300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும் அதன் தொகையானது 2013 ஆம் ஆண்டளவில் 16,934 ஆக அதிகரித்துள்ளது.
முஸ்லிம்களை பொறுத்தவரை 2009 ஆம் ஆண்டில் 2153 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அதன் தொகை 2013 இல் 12,202 ஆக காணப்படுகின்றது.
மேற்படி தரவுகளின் படி போதைப்பொருள் பாவனை மற்றும் விநியோகம் தொடர்பில் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பை காணக்கூடியதாக உள்ளது. இதன்படி 2009 ஆண்டில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 18,743 ஆகவும் 2010 இல் 29,796 ஆகவும் 2012இல் 47,926 ஆகவும் 2013ஆம் ஆண்டு பூர்த்தியாகும் போது அதன் தொகையானது 65,998 ஆக உயர்வடைந்துள்ளது.
2013 ஆம் ஆண்டு இலங்கையில் போதைப்பொருள் பாவனை மற்றும் விநியோகம் தொடர்பிலான குற்றச் செயல்களுக்காக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 65 ஆயிரத்து 998 ஆவதோடு இது 2012 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 38 சதவீத அதிகரிப்பாகும்.
இதற்கமைய கைது செய்யப்பட்டவர்களில் ஆண் பெண் விகிதாசாரத்தை நோக்கும் போது 411 ஆண்களுக்கு ஒரு பெண் என்ற விகிதத்தில் காணப்படுகிறது. இவர்களில் 36 சதவீதத்தினர் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டிற்காகவும் 64 சதவீதத்தினர் கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காகவும் கைது செய்யப்பட்டவர்களாக கருதப்படுகின்றனர்.
கடந்த 2013 ஆம் ஆண்டு போதைப்பொருள் விநியோக குற்றத்திற்காக கைது செய்யப்பட்டவர்களில் இனங்கள் அடிப்படையில் நோக்கும் போது சிங்களவர்கள் 56 சதவீதமாகவும் தமிழர்கள் 26 சதவீதமாகவும் முஸ்லிம்கள் 19 சதவீதமாகவும் காணப்படுகின்றது.
மேற்படி தரவுகள் நாட்டில் போதைப் பொருள் விநியோகம் மற்றும் பாவனையின் அதிகரிப்பை சுட்டிக்காட்டுகிறது , தூய்மையான தேசத்தை , சமூகத்தை கட்டியெழுப்ப இஸ்லாம் பெரும்பாவமாக பிரகடணப் படுத்தியுள்ள போதையில் இருந்து ஓவ்வொரு மனிதனையும் பாதுகாப்பது அனைவரினதும் கடமையாகும்


Sri Lanka Rupee Exchange Rate