சண்டித்தனம் செய்யும் பொதுபலசேனாவின் பல்லு பிடுக்கப்படுமா?
சிறிலங்காவில் இனவாத ரீதியாக செயற்படும் அமைப்புக்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் சட்டமூலமொன்றின் ஊடாக இன...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_942.html

சிறிலங்காவில் இனவாத ரீதியாக செயற்படும் அமைப்புக்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் சட்டமூலமொன்றின் ஊடாக இனவாத அமைப்புகளுக்கு தடை விதிக்கப்படவுள்ளது.
பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போது இது தொடர்பான தகவல்களை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
அண்மையில் நாட்டில் இடம்பெற்ற இன முரண்பாடுகள் தாக்குதல்கள் தொடர்பாக, பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிவிவகார அமைச்சர் மங்களவிடம் வினவிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொதுபல சேனா போன்ற இயக்கங்களின் செயற்பாடுகளை எவ்வாறு கடந்த அரசாங்கம் அனுமதித்தது எனவும், தற்போதைய அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதேவேளை, இனவாத அமைப்புக்கள் தடை செய்யப்பட்டால் அந்தப் பிரச்சினையை எவ்வாறு அணுகுவது என்பது தமக்கு தெரியும் என பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
முதுகெழும்பு இல்லாத அரசியல்வாதிகள் வெளிநாடுகளில் வெளியிடும் கருத்துக்கள் குறித்து கவலைப்பட போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate