மஹிந்தவின் புதல்வருக்கு அதிரடி மாற்றம்! மைத்திரியின் விளையாட்டு ஆரம்பம்
சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றிய, அவரது புதல்வர் யோசித்த ராஜபக்ஷ கடற்படைத் தலைமையகத்த...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_954.html

சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றிய, அவரது புதல்வர் யோசித்த ராஜபக்ஷ கடற்படைத் தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
எதிர்வரும் 9ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புப் பிரிவுக்கு கடந்த மாதமே யோசித்த ராஜபக்ஷ இடமாற்றம் செய்யபட்டிருந்தார். எனினும் திடீரென இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
யோசித ராஜபக்ஸ கடற்படையில் லெப்டினனாக கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
எவ்வாறெனினும், நாரேஹன்பிட்டியில் இலகு ரக விமானம் மீட்கப்பட்டமை, ரகர் வீரர் வசீம் தாஜூடீன் மரணம் மற்றும் குறுகிய காலத்தில் பதவி உயர்வு மற்றும் புலமைப் பரிசில்களை கடற்படையில் பெற்றுக் கொண்டமை குறித்து யோசித்தவிற்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளன. இந்த விடயங்கள் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Sri Lanka Rupee Exchange Rate