கடந்த அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவரின் 2800 கோடி ரூபா மோசடி அம்பலப்படுத்தப்படும்!- ராஜித
கட ந்த அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவரின் 2800 கோடி ரூபா மோசடி அம்பலப்படுத்தப்படும் என அரசாங்கப் பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்...
http://kandyskynews.blogspot.com/2015/03/2800.html

கடந்த அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவரின் 2800 கோடி ரூபா மோசடி அம்பலப்படுத்தப்படும் என அரசாங்கப் பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் செய்த இந்த பாரிய மோசடிகள் தொடர்பிலான சகல விபரங்களும் எதிர்வரும் வாரத்தில் அம்பலப்படுத்தப்படும்.
கடந்த அரசாங்கத்தின் முக்கியஸ்தர் தனது சமையலறையில் பணியாற்றிய ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் ஒன்றின் ஊடாக இந்த மோசடி செய்யப்பட்டுள்ளது.
ஆர் என்ட் ஜீ என்னும் பெயரை உடைய இந்த நிறுவனத்தின் ஊடாக மோசடி செய்யப்பட்டுள்ளது.
தெற்கின் வீதி அபிவிருத்தி ஒப்பந்தமொன்று இந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்கத்தின் முக்கிய குடும்பமொன்றுக்கு வீதி அபிவிருத்திப் பணிகள் ஒப்படைக்கப்பட்ட போதிலும்ää அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள அந்த நிறுவனம் பொருத்தமற்றது என வீதி அபிவிருத்தி அமைச்சர் அறிவித்துள்ளார்.
இந்த பாரிய மோசடிகள் தொடர்பில் அமைச்சரவையில் அடுத்த வாரம் ஆதாரங்களுடன் முறைப்பாடு செய்ப்பட உள்ளதாக ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate