பிரபல ஹொலிவுட் நடிகர் ஹாரிசன் ஃபோர்ட் விமான விபத்தில் காயமடைந்தார்!
லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சிறு விமானம் ஒன்று விபத்திற்குள்ளானதில் அதை ஓட்டிச் சென்ற ஹொலிவுட் நடிகர் ஹாரிசன் ஃபோர்ட் காயமடைந்துள்ளார். 72...

http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_166.html

லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சிறு விமானம் ஒன்று விபத்திற்குள்ளானதில் அதை ஓட்டிச் சென்ற ஹொலிவுட் நடிகர் ஹாரிசன் ஃபோர்ட் காயமடைந்துள்ளார். 72 வயதாகும் ஹாரிசன் போர்ட், இன்டியானா ஜோன்ஸ், ஸ்டார் வோர்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். அவர் ஓட்டிச் சென்ற பழங்காலத்து சிறிய விமானத்தின் எஞ்சின் திடீரென செயலிழந்துவிடவே, வெனிஸ் கொல்ஃப் மைதானத்தில் விமானம் மோதி விபத்திற்குள்ளானது.
உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஹாரிசன் போர்ட் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு ஏற்பட்ட காயங்களால் உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை. முழுமையாக குணமடைந்துவிடுவார் என எதிர்பார்க்கிறோம் என அவரது நிர்வாகி தெரிவித்துள்ளார். ஹாரிசன் போர்டிற்கு என்ன மாதிரி காயங்கள் ஏற்பட்டன என்பது குறித்து செய்திகள் ஏதும் வெளியாகவில்லை. ஆனால், அவரது தலையில் பல இடங்களில் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
|