மை வெளிச்சம் பார்க்கச் சென்ற பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்திய பூசாரி
வீட்டு வராத கணவர் குறித்து தகவல் அறிய மை வெளிச்சம் பார்க்கும் சோதிட நிலையம் ஒன்றுக்கு சென்ற ஒரு பிள்ளையின் தாயான 22 வயது பெண்ணை, பூசாரி ...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_940.html

வீட்டு வராத கணவர் குறித்து தகவல் அறிய மை வெளிச்சம் பார்க்கும் சோதிட நிலையம் ஒன்றுக்கு சென்ற ஒரு பிள்ளையின் தாயான 22 வயது பெண்ணை, பூசாரி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.
இரத்தினபுரி பிரதேசத்தில் இந்த சம்பவம் நேற்று நடந்துள்ளது.
வீட்டில் கணவனுடன் ஏற்பட்ட வாக்கு வாதம் காரணமாக ஆத்திரமடைந்த கணவன் வீட்டை விட்டு வெளியேறியதுடன் சுமார் ஒரு வாரம் வீடு திரும்பவில்லை.
இதனால், கணவன் பற்றிய தகவலை தெரிந்து கொள்ள இந்த பெண் இரத்தினபுரி பிரதேசத்தில் உள்ள மை வெளிச்சம் பார்க்கும் ஆலயம் ஒன்றுக்கு சென்றுள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை சோதிடம் கூறும் தினம் அல்ல என்பதால், அங்கு எவரும் இருக்கவில்லை. பெண் தூர இடத்தில் இருந்து வந்திருப்பதால், மை வெளிச்சம் பார்த்து கூறுவதாக பூசாரி கூறியதுடன் ஆலயத்திற்குள் அழைத்துச் சென்றுள்ளார்.
உள்ளே பெண்ணை அழைத்துச் சென்ற பூசாரி அந்த பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate