தேசிய அரசாங்கத்தை ஏற்படுத்துவது இலகுவானதல்ல: லண்டனில் ஜனாதிபதி
இலங்கையில் ஒரு அரசியல் கட்சி தனது இருப்புக்காக ஏனைய கட்சிகளை உடைத்து பலமற்று போக செய்யும் அரசியல் கலாச்சாரம் காரணமாக அனைவரும் எதிர்பார்த...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_790.html

இலங்கையில் ஒரு அரசியல் கட்சி தனது இருப்புக்காக ஏனைய கட்சிகளை உடைத்து பலமற்று போக செய்யும் அரசியல் கலாச்சாரம் காரணமாக அனைவரும் எதிர்பார்த்தபடி தேசிய அரசாங்கம் ஒன்றை உருவாக்குவது இலகுவான விடயம் அல்ல என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரித்தானிய கிளையில் மைத்திரி ஆதரவு அணியினர் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
2004 ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தின் போதும், 2009 ஆம் ஆண்டு போர் வெற்றியின் பின்னரும், 2015 ஆம் ஆண்டு பொது வேட்பாளர் வெற்றி பெற்ற பின்னரும் இலங்கையில் ஐக்கியப்படுத்தி மீளகட்டியெழுப்பு சந்தர்ப்பம் கிடைத்தது.
முதலில் கிடைத்த இரண்டு சந்தர்ப்பத்தை நாம் இழந்து போனோம். தற்போது இறுதியான சந்தர்ப்பமே எம்மிடம் எஞ்சியிருக்கின்றது.
பிளவுபட்டு போன நாட்டை ஒன்றுபடுத்தவும் வீழ்ந்து போயுள்ள பொருளாதாரத்தை முன்னேற்றவும் 2015 ஆம் ஆண்டு கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
வடக்கிலும் தெற்கிலும் உள்ள அரசியல் கட்சிகள் அவதூறு அரசியலை நிறுத்த வேண்டும். அவர்களின் சுயநலம் மற்றும் சந்தர்ப்பவாத அரசியல் கைவிடவில்லை என்றால், இன்னும் 10 வருடங்களில் மற்றுமொரு யுத்தம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.
அதேவேளை இலங்கையின் ராஜதந்திர சேவையில் ஏற்பட்டுள்ள தோல்வி மற்றும் அவமானத்தை மாற்றி, அதன் புகழையும் சிறப்பையும் மீண்டும் ஏற்படுத்த வேண்டும்.
தூதுவர் பதவிகளும் ராஜதந்திர பதவிகளும், நண்பர்கள், உறவினர்கள்,பந்தம் பிடிப்போர், ஆடம்பரம் தேடிச் செல்வோர் மற்றும் பிள்ளைகளை வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் சேர்க்கும் நபர்களுக்கும் வழங்கப்படக் கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate