மிக மிக சிறு ரக ஆளில்லா விமானங்களை வாங்க சுவிஸ் அரசு திட்டம்!
எதிரிகளை கண்காணிக்க கூடிய வகையில் புதிய ஆளில்லா விமானங்களை வாங்க சுவிஸ் ராணுவம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ட்ரோன்ஸ் (Dron...

http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_863.html

ஆளில்லா விமானங்களை கொள்முதல் செய்வதற்காக அரசு சுமார் 8 மில்லியன் பிராங்குகளை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பரிசோதனை செய்யப்பட்ட மாதிரி விமானங்கள் அல்லது அவற்றை பற்றிய விவரக்குறிப்புகள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்படும். அகச்சிகப்பு கமெராக்கள் (Infrared Cameras) பொருத்தப்பட்டுள்ள இந்த ஆளில்லா விமானங்களை எந்த சிரமமும் இன்றி வெறும் கைகளாலேயே வானத்தில் உடனுக்குடன் செலுத்தலாம்.
சுவிஸ் ராணுவத்துடன் ஏற்கனவே பெரிய அளவிலான ஆளில்லா விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன. பேராபத்துகளில் உதவியாகவும் காவல் மற்றும் எல்லையோர பாதுகாப்பு பணிகளில் இவ்வகையான பெரிய ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது