இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் நியமனம்
இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக அதுல் கெஷாப் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை அமெரிக்க வெள்ளை மாளிகை ...


இந்த தகவலை அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் உதவி இராஜாங்க செயலாளராக அதுல் கெஷாப் கடமையாற்றி வருகின்றார்.
2010 ஆம் ஆண்டிலிருந்து 2012 ஆம் ஆண்டு வரை, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின், இலங்கை, இந்தியா, நேபாளம், பங்களாதேஷ் மற்றும் பூட்டான் நாடுகளுக்கான பணிப்பாளராகவும் அதுல் கெஷாப் கடமையாற்றியுள்ளார்.
இந்திய வம்சாவளியினரான அமெரிக்க வெளிநாட்டு சேவையில் ஈடுபட்டுள்ள அதுல் கெஷாப், வெர்ஜினியா பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி கற்றுள்ளார்