இந்த வயதான தாத்தாவா வங்கியை கொள்ளையடித்தார் ? அமெரிக்க பொலிசாரை அதிரவைத்த சம்பவம்
அமெரிக்க பொலிசாரை அதிரவைத்த சம்பவம் தான் இது. கடந்த 3 மாதங்களாக அமெரிக்காவில் உள்ள கரொலைனா மாநிலப் பொலிசார் ஒரு வயதான வெள்ளைக்கார தாத்தாவ...


அமெரிக்க பொலிசாரை அதிரவைத்த சம்பவம் தான் இது. கடந்த 3 மாதங்களாக அமெரிக்காவில் உள்ள கரொலைனா மாநிலப் பொலிசார் ஒரு வயதான வெள்ளைக்கார தாத்தாவை தேடி வந்தார்கள். டிசம்பர் மாதம் அம் மாநிலத்தில் உள்ள வங்கி ஒன்றில் குறித்த தாத்தா கொள்ளையடித்து இருந்தார். இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றவேளை , அதே நகரில் வெடிகுண்டு இருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைக்க, பெருமளவான பொலிசார் அவ்விடம் நோக்கிச் சென்றுவிட்டார்கள். அதனால் கொள்ளையடித்த கில்லாடி தாத்தா அப்படியே எஸ்கேப் ஆகிவிட்டார். ஆனால் அங்கே எந்த ஒரு வெடிகுண்டும் இருக்கவில்லை. பின்னர் தான் பொலிசாருக்கு விடையம் புரிந்தது. இக்கொள்ளை சம்பவத்தை திசை திருப்பவே இந்த குண்டுப் புரளி நடந்துள்ளது என்று.

மிகவும் நேர்த்தியாக திட்டமிடப்பட்டு இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்பது பொலிசாருக்கு புரிந்துவிட்டது. இதனால் அவர்கள் சற்று நிதானமாக குற்றவாளியை தேட ஆரம்பித்தார்கள். கொள்ளை இடம்பெற்ற நேரம் அங்கே வந்த நீலக் கலர் வேன் ஒன்று, அங்கே தரித்து நின்றுவிட்டு பின்னர் கொள்ளை சம்பவம் முடிந்தவேளை அங்கே இருந்து புறப்பட்டுச் செல்வதனை , வீதியில் உள்ள CCTV கமராவில் அவதானித்த பொலிசார் அந்த வேனின் இலக்க தகட்டை வைத்து , தேடியவேளை அது ஒரு கறுப்பின ஆபிரிக்கருக்கு சொந்தமான வேன் என்று புரிந்துவிட்டது. அன் நபர் பெயர் கொன்ஸ்டன். அவரை பொலிசார் தேடி வந்தார்கள். கொள்ளையடித்த வெள்ளைக்கார தாத்தாவுக்கும் இந்த ஆபிரிக்கருக்கும் என்ன தொடர்பு என்று பொலிசார் ஆராய்ந்து வந்தார்கள்.
நேற்றைய தினம், பிறிதொரு மாநிலத்தில் சாலையில் வேக கட்டுப்பாட்டை மீறி ஒரு லக்ஸஸ் கார் சென்றுள்ளது. அதனால் பொலிசார் அந்த காரை மறித்துள்ளார்கள். காரில் இருந்த ஆபிர்க்க நபர் பொய்யான பெயர் ஒன்றைச் சொல்லியுள்ளார். இதனால் சந்தேகம் கொண்ட பொலிசார் காரின் இலக்க தகட்டை வைத்து , ஆராய்ந்துள்ளார்கள். காரின் சொந்தக்காரர் பெயர் பொலிசார் தேடும் பட்டியலில் இருந்துள்ளது. இருப்பினும் அது தனது நண்பருடைய கார். வேண்டும் என்றால் அவரை போய் தேடுங்கள் என்று இன் நபர் கூறியுள்ளார். ஆனால் அதனை நம்பாத பொலிசார் ஆபிரிக்கரை கைதுசெய்ய முற்பட்டவேளை , அவர் உடனே ஓட ஆரம்பித்துவிட்டார். ஆனால் இறுதியில் அவரை கைதுசெய்துவிட்டார்கள் பொலிசார்.
அவரைக் கைதுசெய்த பின்னரே அவர் தான் "கொன்ஸ்டன்" என்னும் பெயருடைய நபர் என்று பொலிசார் உறுதிசெய்தார்கள். அவரது காரை சோதித்த உடனே அனைவரும் அதிர்ந்து போனார்கள். பொலிசார் இதுவரை காலமும் தேடிவந்த வெள்ளைக்கார தாத்தா வேறும் யாரும் அல்ல சாட்சாத் இந்த "கொன்ஸ்டன்" தான். இவர் பக்கா முகமூடி ஒன்றை அணிந்து வெள்ளைக்கார தாத்தா போல வேடமிட்டு கொள்ளையடித்துள்ளார். அதுபோக அவரது மனைவியே பொலிசாருக்கு போன் செய்து வெடிகுண்டு இருப்பதாக தகவல் சொல்லியும் உள்ளார் என்ற விடையத்தையும் பொலிசார் துப்பு துலக்கி பிடித்துவிட்டார்கள்.
