ஜனாதிபதி நாடு திரும்பியதும் அமைச்சரவையில் மாற்றம்!
பிரிட்டனுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதும் அமைச்சரவையில் சில மாற்றங்கள் இடம்ப...

![]()
பிரிட்டனுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதும் அமைச்சரவையில் சில மாற்றங்கள் இடம்பெறலாம் என தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி இணங்கியுள்ள நிலையில் ஜனாதிபதி நாடு திரும்பியதும் அதற்கான முயற்சிகள் எடுக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
|
எனினும் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சி விரும்பவில்லை என்றும் தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம் அமைக்க ஐக்கிய தேசிய கட்சி தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை "எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு பின்னர் தற்போதைய அரசாங்கத்தை கொண்டு நடத்துவதற்கு எமக்கு மக்களின் ஆணை கிடைக்கவில்லை. மேலும் எமது கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் கீழ் மட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் தேர்தலுக்கு தயாராகுமாறு பணிக்கப்பட்டுள்ளது" என்று ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.
"ஐக்கிய தேசிய கட்சி தேசிய அரசாங்கத்தை விரும்புகின்றது. ஆனால் அந்த தேசிய அரசாங்கம் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு பின்னரே அமையவேண்டும் என்பது எமது நிலைப்பாடாகும்" என்றும் ஐ.தே.க.வின் தவிசாளர் சமரவிக்ரம ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்."ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்களுக்கு பாராளுமன்றத் தேர்தல் தாமதமாகின்றமை தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சிக்கு பிரச்சினை இல்லை. ஆனால் 100 நாட்களுக்கு பின்னர் இந்த அரசாங்கத்தைக் கொண்டு நடத்த மக்கள் ஆணை வழங்கவில்லை" என்றும் மலிக் சமரவிக்ரம குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை கூடிய சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு ஜனாதிபதி மைததிரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்துடன் இணைந்து சுதந்திரக் கட்சி தேசிய அரசா்ஙகம் அமைப்பதற்கு அனுமதி அளித்திருந்தது.அத்துடன் சுதந்திரக் கட்சியின் சார்பில் எத்தனை அமைச்சுக்களை பெறுவது யாருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவது என்பது குறித்து ஆராய எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி. சில்வா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலர் அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் தேசிய அமைப்பாளர் சுசில் பிரேம்ஜயந்த ஆகியோரைக் கொண்ட குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
|