4 வயது பிள்ளையை அடித்து துன்புறுத்திய தாய் கைது

நோர்வூட் பகுதியில் உள்ள  தோட்டம் ஒன்றில் 4 வயதுள்ள ஒரு சிறுமியை தாய் அடித்து துன்புறுத்தியுள்ளதாக தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளத...




நோர்வூட் பகுதியில் உள்ள  தோட்டம் ஒன்றில் 4 வயதுள்ள ஒரு சிறுமியை தாய் அடித்து துன்புறுத்தியுள்ளதாக தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கிடைத்த முறைப்பாட்டையடுத்து குறித்த தாயை நோர்வூட் பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
மேற்படி தாயினால் இதற்கு முன்னரும் பல தடவைகள் இவ்வாறு அடித்து துன்புறுத்தியுள்ளதாக குறித்த சிறுமியின் தாத்தா தெரிவிக்கின்றார்.
அதன்பின் நோர்வூட் பொலிஸாருக்கு சிறுமியின் தாத்தா செய்த முறைப்பாட்டையடுத்து குறித்த தாயை பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து அறிவுறுத்தல் வழங்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தந்தை கொழும்பில் பணி புரிவதாகவும் தாய் தோட்டத் தொழிலாளியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ரமேஷ் ராஜா சௌமியா என்ற இந்த சிறுமி வீட்டில் குழப்பம் செய்வதன் காரணமாக இவ்வாறு தாய் அடித்துள்ளதாக நோர்வூட் பொலிஸார் செய்த விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இவ்வாறு தாய் சிறுமியின் காலில் அடித்ததால் சிறுமி நடக்கமுடியாதளவில் இருக்கும் போது தோட்டததில் இருக்கின்ற சிறுவர் பாராமரிப்பு நிலையத்தின் பொறுப்பாளர் பொலிஸாருக்கு கொடுத்த தகவலையடுத்து பொலிஸார் சிறுமியை டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்த தாயை ஹற்றன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக நோர்வூட் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related

புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டம் விடுதலைப் புலிகளை மீண்டும் எழுச்சி பெறச்செய்யும்: மஹிந்த

எதிர்வரும் பொதுத்தேர்தலில் பிரதம மந்திரி வேட்பாளராக போட்டியிடக்கோரும் மக்கள் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மாத்தறையில் நேற்று மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவ...

சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு உரியவாறு வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு

சிறுநீரக நோயாளர்களுக்கான 3000 ரூபா கொடுப்பனவு வழங்கும் அரசாங்கத்தின் திட்டம் உரியவாறு முன்னெடுக்கப்படவில்லை என வடமத்திய மாகாண சுகாதார அமைச்சு குறிப்பிட்டது. இந்த கொடுப்பனவைப் பெற்றுக்கொள்வதற்கு தகுத...

கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் இருதய மாற்று சத்திரசிகிச்சைகள் தடைப்பட்டுள்ளன

கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் இருதய மாற்று சத்திரசிகிச்சைகள் தடைப்பட்டுள்ளதால் 800 ற்கும் அதிகமான நோயாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. இந்த நோயாளர்களில் தீவிர ...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item