சரத் பொன்சேகா நிரபராதி: இலங்கை நீதிமன்றம் அறிவிப்பு!
இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா நிரபராதி என இலங்கை நீதிமன்றம் அறிவித்துள்ளது. இலங்கையின் ராணுவ தளபதியாக பணியாற்றிய சரத் ப...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_714.html

இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா நிரபராதி என இலங்கை நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இலங்கையின் ராணுவ தளபதியாக பணியாற்றிய சரத் பொன்சேகா, ராஜபக்சே ஆட்சியின்போது, விடுதலைப்புலிகள் மீதான தாக்குதலுக்கு தலைமை தாங்கினார். இதையடுத்து, தனது ராணுவ தளபதி பொறுப்பில் இருந்து விலகிய பொன்சேகா, கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
இதைத்தொடர்ந்து, பொன்சேகா மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், அவரது குடியுரிமை உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் பறிக்கப்பட்டன. பொன்சேகா மீதான வழக்கு கொழும்பு நீதிமன்றத்தில் கடந்த 4 ஆண்டகளாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில், சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்சே தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சிறிசேனா ஜனாதிபதியாக பொறுப்பேற்றார். இதையடுத்த, சரத் பொன்சேகாவுக்கு பொது மன்னிப்பு அளித்து சிறிசேனா தலைமையிலான அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், சரத் பொன்சேகா மீதான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. கொழும்பு நீதிமன்ற தேவிகா தென்னகோன் விடுத்துள்ள அந்த தீர்ப்பில், சரத் பொன்சேகா மற்றும் அவரது செயலாளர் சேனக சில்வா ஆகியோர் நிரபராதிகள் எனக் கூறி அவர்களை விடுதலை செய்தார்.


Sri Lanka Rupee Exchange Rate